இந்தியாவில் வேலைகளையும் வேட்டையாடிய கொரோனா.. புதிய உச்சம் தொட்ட வேலையின்மை
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து உலகமே பொருளாதாரமே பேரழிவை சந்தித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட இந்தியாவை இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை மோசமான கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 353 பேர் இந்தியா முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனாவால் இந்தியாவில் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில், வேலைவாய்ப்பு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்தது. நாட்டில் வேலையின்மை விகிதம் முதன்முறையாக இரட்டை இலக்கத்தை சந்தித்துள்ளது.

வேலையின்மை
சென்டர் ஃபார் மானிட்டரிங் எகனாமியின் (சி.எம்.ஐ.இ) வெளியிட்ட ஆய்வின் படி , மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது மார்ச் ஆரம்பத்தில் 8.4 சதவீதமாக இருந்த வேலையின்மை மார்ச் இறுதியில் 23.8 சதவீதமாக உயர்ந்தது.

7 சதவீதம் டூ 23 சதவீதம்
கொரோனா வைரஸ் பிரச்னை வெளியான ஜனவரி மாதத்தில் இருந்தே வேலையின்மை இந்தியாவில் படிப்படியாக அதிகரித்தது. செப்டம்பர் 2016 முதல். வேலையின்மை விகிதம் நாட்டில் வேகமாக அதிகரித்தது. 2020 ஜனவரி மாதத்தின் 7.16 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.7 சதவீதமாக உயர்ந்தது. இது 43 மாதங்களில் மிக உயர்ந்த வேலையின்மை விகிதமாகும். தற்போது லாக்டவுன் தொடங்கிய நிலையில் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏப்ரலில் இன்னும் மோசம்
மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் என்பது 38.2 சதவீதமாக குறைந்துள்ளது. லாக்டவுன் காரணமாக வேலைவாய்ப்பே நிலவரம் மோசமான கட்டத்தை எட்டிள்ளது என்று சி.எம்.ஐ.இ. தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும் வேலையின்மை பிரச்சனை விஷயங்கள் இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி, 30 நாளில் மட்டும் வேலையின்மை விகிதத்தின் சராசரி 13.5 சதவீதம் உயர்ந்தது.

விவசாய வேலையும் முடக்கம்
இந்தியாவில் நகர்ப்புறங்களில், கிராமங்களிலும் இரட்டை இலக்கத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக விவசாய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் வேலையின்மை 13.08 சதவீதத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் இது 14.53 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதிய உச்சம் தொட்டது
"ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைகள் குறைந்துள்ளது. வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 10 லட்சம் ஆக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் 39 கோடியே 60 லட்சமாக குறைந்துள்ளது. இதன் மூலம் 3 மாதத்தில் மட்டும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சம் பேர் வேலையற்றவர்களாக மாறி உள்ளனர் என்று சி.எம்.ஐ.இ. அறிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications