லாக்டவுனை தளர்த்திய முதல் நாளே ஷாக்.. இதுவரை இல்லாத அளவு அதிகரித்த கொரோனா பலி எண்ணிக்கை
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 2,573 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 83 இறப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. எனவே, இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் கேஸ் திங்களன்று 42,836 ஆக அதிகரித்துள்ளன. மொத்த, கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 1,389 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில் 11,762 பேர் குணப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 12,974 கேஸ்கள் மற்றும் 548 இறப்புகளுடன் மகாராஷ்டிரா மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. குஜராத் 5,428 கேஸ்கள் மற்றும் 290 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

டெல்லியில் இதுவரை 4,549 கேஸ்கள், 64 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 165 இறப்புகளும், 2,942 கேஸ்களும் புதிதாக பதிவாகியுள்ளன.
முன்னதாக நேற்று, மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியாவில் COVID-19ன் மீட்பு விகிதம் 27.52 சதவீதமாக உள்ளது என அறிவித்திருந்தது. மீட்பு விகிதம் அதிகம் என்பது பாசிட்டிவான விஷயமாகும். ஆனால், 24 மணி நேரத்தில் 83 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது இதுதான் முதல் முறையாகும்.
"COVID-19 வளைவு இப்போது ஒப்பீட்டளவில் தட்டையானது; நாம் கூட்டாக பணியாற்றினால், பாதிப்பில் உயர்வு வரக்கூடாது, ஆனால் நாம் இணைந்து செயல்படுவதில் தோல்வியுற்றால் கேஸ்களில் அதிகரிப்பு காணப்படலாம்" என்று மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் கூறினார்.
மே 4ம் தேதி முதல், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி 3வது லாக்டவுனை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது லாக்டவுன் தளர்வுக்கு முன்பே பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் இவர்கள். இப்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளதால், பாதிப்பு அதிகரித்திவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது என்பதை மறுக்க முடியாது.
Recommended Video
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications