கேரளா.. ஒரு பக்கம் அதிகரிக்கும் தொற்று.. மறுபக்கம் தடுப்பூசியில் நாட்டிலேயே லீடிங்.. என்ன நடக்கிறது?
கேரளாவில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது
டெல்லி: கேரளாவில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அதேசமயம், தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அந்த மாநிலம் மற்றவர்களை விட முன்னணியில் இருந்து வருகிறது. இதுதான் பெரும் குழப்பமாக இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறையவே இல்லை.. மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மறுபடியும் அதிகரித்து வருகிறது...
12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 44 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்தியா
கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. கடந்த வாரம், கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் கிட்டத்தட்ட பாதி சதவீதம் அதாவது 49.85 சதவீதம் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

பாதிப்புகள்
நாடு முழுவதும் 16,49, 295 டெஸ்ட்கள் எடுக்கப்பட்டுள்ளன.. தினசரி பாதிப்பு விகிதமானது 1.85 சதவீதம் என்றும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.39 சதவீதம் என்றும் கூறப்படுகிறது.. நேற்று மட்டும் பாதிப்புக்குள்ளான 30,549 பேரில், கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்ற இந்த 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே 77.4 சதவீதத்தினர் ஆவார்கள்.

உயிரிழப்பு
இதில், தினசரி பாதிப்பில் கேரளா மாநிலத்தவர்கள் மட்டுமே கிட்டத்தட்ட 46 சதவீதம் ஆகும் என்பதுதான் அதிர்ச்சி தகவலே. நேற்று, மகாராஷ்டிராவில் 90 பேர் இறந்த நிலையில், கேரளாவில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் இறப்புவிகிதம் 1.34 சதவீதமாக இன்னமும் தொடர்ந்து வருகிறது.. பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில், சமீப காலமாகவே 1,000 க்கும் குறைவான கேஸ்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன.. டெல்லியில் இப்போது 568 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது.

கேரளா
தொற்று பாதிப்பில் அதிக எண்ணிக்கையில் கேரள மாநிலம் இருந்தாலும், தடுப்பூசி போடுவதில், மற்றவர்களை விட கேரளாதான் முன்னணியில் உள்ளதாம்.. இங்குள்ள மக்கள்தொகையில் 23 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. இதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 21 சதவிகிதமும், ராஜஸ்தானில் 15 சதவிகிதமும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கேஸ்கள்
இந்தியாவில் 2.55 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன.. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகம் என்கிறார்கள்.. முந்தைய வாரத்தில் 38,148 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. ஆனால், இந்த வாரம் சராசரியாக 40,671 க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளன.
Recommended Video

இறப்பு விகிதம்
ஆனால், இறப்பு விகிதம் குறைந்துள்ளதாம்.. தினசரி இறப்புகள் 980-லிருந்து 544-ஆக குறைந்துள்ளது.. கடந்த வாரம் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 6,485 ஆக இருந்த நிலையில், இப்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்து 3,391 ஆக உள்ளது.. கேரளாவில் மட்டும் கடந்த வாரத்தில் தினசரி 115 உயிரிழப்புகள் ஏற்பட்டது.. ஆனால், இந்த வாரம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications