கிரீன் சோன்களில் மதுக்கடைகளுக்கு அனுமதி.. தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் மட்டும் திறக்கப்படும் டாஸ்மாக்
பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுக்க பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடு முழுக்க பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் மண்டலத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது.
அதே சமயம் மது கடைகளில் அமர்ந்து குடிக்கும் பார்களுக்கு அனுமதி கிடையாது. மதுவை வாங்கிவிட்டு வீடுகளுக்கு சென்று மது குடிக்கலாம். அதேபோல் கடைகளில் மதுவை வாங்கும் போது ஆறு அடி இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும். மதுகடைகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால் பொது இடங்களில் இருந்து மது அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் மட்டும்தான் கொரோனா கேஸ்கள் இல்லை. அதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டும் கிரீன் சோன் பகுதியாக உள்ளது.
இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் மட்டும் மே 4ம் தேதிக்கு பிறகு மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications