இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை.. வெளியே எங்கும் செல்ல முடியாது.. மத்திய அரசு அறிவிப்பு!
நாடு முழுக்க அனைத்து மண்டலங்களிலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுக்க அனைத்து மண்டலங்களிலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயம் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளிலும் கூட இரவு 7 மணிக்கு பின்பும் காலை 7 மணிக்கு முன்பும் மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது. மருத்துவ தேவை போன்ற மிக அவசர தேவை இருந்தால் மட்டுமே இந்த நேரத்தில் மக்கள் வெளியே செல்ல முடியும். இங்கு சூழ்நிலையை பொறுத்து உள்ளூர் நிர்வாகம் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது 144 தடை உத்தரவு, கடுமையான இரவு நேர ஊரடங்கு போன்ற விதிகளை உள்ளூர் நிர்வாகம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
அதேபோல் 65 வயது நிரம்பிய நபர்கள், ஏற்கனவே உடலில் நோய்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவ தேவை இன்றி வேறு காரணங்களுக்கு வெளியே செல்ல கூடாது. எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களிலும் மருத்துவமனைகள் இயங்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications