நல்லா பண்ணிருக்கீங்க.. கீப் இட் அப்.. முதல்வரை பாராட்டிய மோடி.. நேற்று மீட்டிங்கில் நடந்தது என்ன?
கொரோனா தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார்.
டெல்லி: கொரோனா தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. 275 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.இதில் மொத்தம் 229 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் மிக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரே நாளில் நேற்று 63 பேர் இதனால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக இன்று மட்டும் காலையிலிருந்து 17 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 23 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்தார். மொத்தம் 22 மாநில முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர். கடந்த வாரம் மக்கள் முன்னிலையில் பேசிய மோடி அப்போதே மாநில முதல்வர்களை இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து இருந்தார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்றது.

எத்தனை மணி நேரம்
மொத்தம் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 9 மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர், கேரள முதல்வர், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேச ஆகிய மாநில முதல்வர்கள் இதில் நீண்ட நேரம் பேசினார்கள். தங்கள் மாநிலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

கேரளா முதல்வர்
இதில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் நீண்ட நேரம் பேசினார். இதில் பேசுவதற்காக அவர் பெரிய அளவில் கோப்புகளை எடுத்து வந்து, முழு தயாரிப்போடு பேசினார். தங்கள் மாநில பிரச்சனைகளை அவர் முழுமையாக அடுக்கினார். அதற்கு எதிரான செயல்திட்டங்களை விளக்கினார். அதேபோல் கேரள மாநிலத்திற்கு எவ்வளவு நிதி வேண்டும் என்பதையும் அவர் இதில் குறிப்பிட்டார். அவரின் பேச்சை பல மாநில முதல்வர்கள் கூர்ந்து கவனித்தார்கள்.

தமிழகம் எப்படி
அதன்பின் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை குறித்து பேசினார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எப்படி சரி செய்யப்பட்டார் என்று விளக்கம் அளித்தார். இவரும் பல்வேறு முக்கிய விஷயங்களை இதில் எடுத்துரைத்தார். அதன்பின் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசினார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச அனுமதி கேட்டும் கூட அனுமதி வழங்கப்படவில்லை.

என்ன பாராட்டு
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார். தமிழக முதல்வர் பழனிச்சாமியை பாராட்டிய மோடி, நீங்கள் சரியாக செயல்படுகிறீர்கள். தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. உங்கள் பணிகளை தொடருங்கள் என்று கூறினார். அதன்பின் மகாராஷ்டிரா மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் தீவிரமாக முயல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications