அமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வரும் கொரோனா உயிரிழப்பு.. இந்தியாவில் மட்டும் கிடுகிடு
டெல்லி: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,70,997 ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 2,30,94,200 பேர் மீண்டுள்ளனர். 9,68,873 பேர் பலியாகி விட்டனர். தற்போது 7,407,924 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் நேற்று 74493 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் ஒரே நாளில் அதிக மரணத்தையும் இந்தியா சந்தித்துள்ளது.
டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,70,997 ஆக உயர்ந்துள்ளது.இதில் இதுவரை 2,30,94,200 பேர் மீண்டுள்ளனர். 9,68,873 பேர் பலியாகி உள்ளனர்.

உலகில் அதிக தொற்று எண்ணிக்கையுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு இதுவரை கொரோனா தொற்றால் 70,45,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் 55,60,105 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 3வது அதிக கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள பிரேசிலில் இதுவரை 4,560,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 4வது அதிக கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள ரஷ்யாவில் இதுவரை 1,109,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகிலேயே கொரோனாவால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 204,475 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே 2வது அதிக மரணத்தை சந்தித்த நாடாக பிரேசில் உள்ளது, அங்கு 137,350 பேர் பலியாகி உள்ளனர்,. உலகிலேயே 3வது அதிக மரணத்தை சந்தித்த நாடாக இந்தியா உள்ளது, இங்கு 88,955 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்
உலகிலேயே அதிகபட்சமாக கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் 1056 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் ஒரே நாளில் 455 பேரும், அர்ஜெண்டினாவில் 429 பேரும், அமெரிக்காவில் 357 பேரும் பலியாகி உள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் இந்தியாவில் 74493 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 35,999 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 15,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications