அமெரிக்க உளவுத்துறை கொடுத்த வார்னிங்.. அப்படியே நடந்தது.. இந்தியாவிற்குள் கொரோனா வந்தது எப்படி?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீடீர் என்று வேகம் எடுத்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தீடீர் என்று வேகம் எடுத்துள்ளது. அதேபோல் உலகம் முழுக்க 80 நாடுகளில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க உளவுத்துறை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தது.
இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உளவுத்துறை இந்த எச்சரிக்கையையே விடுத்து இருந்தது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு உளவுத்துறை அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இந்தியா வருகை
இந்தியா மீது அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுக்க நிறைய காரணம் இருந்தது. முதலில் இந்தியாவில் இருக்கும் அதிகமான மக்கள் தொகை இதற்கு ஒரு காரணம். அதேபோல் சீனாவிற்கு மிக அருகில் இந்தியா இருக்கிறது. சீனாவில் இருந்து பலர் கடந்த சில மாதங்களில் இந்தியாவிற்கு பயணித்து இருக்கிறார்கள். அதேபோல் நோய் தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் இருந்து இந்தியாவிற்கு பலர் வந்துள்ளனர்.

வேகமாக பரவ வாய்ப்பு
இதனால் இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது. அதே சமயம் இந்தியா இதற்கு எதிராக என்ன செய்யும் என்றும் உளவுத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. இந்தியா இதை எப்படி எதிர்கொள்ளும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்தது. இந்தியர்கள் அதிகம் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி உள்ளது. முக்கியமாக இந்தியா இதில் அலட்சியமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்கா எச்சரித்தது.

தற்போது அதேபோல்
தற்போது அமெரிக்க உளவுத்துறை அறிவித்தது போலவே இந்தியாவில் வேகமாக இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது. டெல்லியில் மட்டும் 6 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க எச்சரித்தது போலவே இந்திய அதிகாரிங்களின் கவனக்குறைவால் இந்த வைரஸ் இந்தியாவிற்குள் பரவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி பரவியது
டெல்லியில் மற்றும் ஹைதராபாத்தில் வைரஸ் பரவியதற்கு காரணம் விமான நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவுதான். பெங்களூருக்கு ஹாங்காங்கில் இருந்து வந்தவரை சோதிக்காமல் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதித்தது முதல் தவறு. அதேபோல் இத்தாலியில் இருந்து டெல்லி வந்தவரை சோதிக்காமல் அனுப்பியது டெல்லியில் வைரஸ் பரவ காரணமாக அமைத்தது. அதன்பின் இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தற்போது இந்த வைரஸ் பரவி இருக்கிறது. சிறிய கவனக்குறைவால் இந்த வைரஸ் பரவி உள்ளது.

வைரஸ் பரவி உள்ளது
ஏற்கனவே உலக நாடுகளில் தங்களின் உளவு அதிகாரிகளை, அமெரிக்கா அனுப்பி உள்ளது. அந்த நாடுகள் எப்படி கொரோனவை எதிர்கொள்கிறது. இது தொடர்பாக எதையாவது மறைக்கிறதா என்று இவர்கள் தகவல் அளித்து வருகிறார்கள். கொரோனா இந்தியாவில் எப்படி தடுக்கப்படுகிறது என்பதையும், அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது. அமெரிக்காவிற்கு பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.கொரோனா வைரஸால் உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 3100 ஆக உயர்ந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications