இந்தியாவில் விரைவில் 2-12 வயது குழந்தைகளுக்கு கொரோனா வேக்சின்.. என்ன வேக்சின் போடப்படும் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் விரைவில் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் வேக்சினை குழந்தைகளுக்கு பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் இதுவரை 187 கோடி டோஸ் வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 84 கோடி பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. 1,08,10,37,807 பேர் இதுவரை வேக்சின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. டெல்லி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

இந்தியா மாஸ்க்
இந்த நிலையில்தான் இந்தியாவில் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வேக்சின் போட வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் மூலம் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி 2-12 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் வேக்சின் போட்டு நடத்தப்பட்ட சோதனை டேட்டா விவரங்கள் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

ஆலோசனை
இந்த டேட்டா குறித்த ஆலோசனை நேற்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பயோ - கோர்போவாக்ஸ் வேக்சினை 5-12 வயது குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் இதில் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான டேட்டா விவரங்களும் நேற்று ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் 25ம் தேதி 12-18 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

கோவாக்சின்
அதன்படி தற்போது 15-18 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் வழங்கப்பட்டு வருகிறது. 12-14 வயது குழந்தைகளுக்கு பயோ இ கோர்போவேக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 வயது குழந்தைகளுக்கும் கோவாக்சின் போடும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. வல்லுனர் குழு பரிந்துரையை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் விரைவில் கோவாக்சினுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2380 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக இந்தியாவில் 4,30,49,974 கேஸ்கள் பதிவாகி உள்ளன. ஆக்டிவ் கேஸ்கள் 13,433 ஆக உள்ளது. பாசிட்டிவிட்டி சதவிகிதம் 0.53% ஆக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாஸ்க் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications