Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பக்ரீத்துக்கு 3 நாட்கள் தளர்வு ஏன்?".. உடனே பதிலளிக்க வேண்டும்.. கேரள அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

கேரளாவில் 3 நாட்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதற்கான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளாவில் பக்ரீத் பண்டிகையையொட்டி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கேரள அரசுக்கு சுப்ரீம்கோரட் உத்தரவிட்டுள்ளது

2 மாதத்துக்கு முன்பிருந்ததைவிட, நாட்டில் தற்போது தொற்று மெல்ல குறைந்து வருகிறது.. எனினும், 3வது அலை வரப்போவதாக எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.. இதுபோக, 3-வது அலை தொடர்பாக எச்சரிக்கை வெளிவந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் யாத்திரைகளை நடத்த உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

தொற்று

தொற்று

குறிப்பாக கன்வர் யாத்திரைக்கு உபி அரசு நடவடிக்கை எடுத்தது.. இதையடுத்து, கன்வர் யாத்திரை நடத்துவது தொடர்பாக சுப்ரீம்கோர்ட் தாமாகவே முன்வந்து விசாரித்து வந்தது.. ஆனால் தொற்று பரவல் இருப்பதை கருத்தில் கொண்டு அந்த யாத்திரையை நடத்தும் முடிவை உபி அசு மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டும் அறிவுறுத்தியிருந்தது.. ஆனாலும் இந்த வருடம் யாத்திரையை அனுமதிக்க வேண்டாம் என்று உபி அரசு முடிவு செய்துள்ளதாக அந்த மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது.. இதையடுத்து இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது..

கேரளா

கேரளா

இப்படிப்பட்ட சூழலில், பக்ரீத் பண்டியை முன்னிட்டு கேரளாவில் 19ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.. அதாவது, கேரளத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து பகுதிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஜூலை 18 முதல் 20-ம் தேதி வரை கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது..

பாதிப்பு

பாதிப்பு

அதன்படி முதல் 3 பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள், ஜவுளி, நகை, எலக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான கடைகளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 4-வது பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அது போன்ற கடைகள் ஜூலை 19-ம்தேதி மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது... இந்த பகுதிகள் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகம் உள்ள இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன..

விசாரணை

விசாரணை

இப்படி தளர்வுகள் அளிக்கப்பட்டதற்கு, டெல்லியில் நம்பியார் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்த மனுவானது நீதிபதிகள் நாரிமன், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது மனுதாரர் தரப்பில் சொல்லும்போது, "உபியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.02 சதவீதமாகவும், டெல்லியில் 0.07 சதவீதமாகவும் உள்ளது..

பாதிப்பு

பாதிப்பு

ஆனால் கேரளத்தில் 10.96 சதவீதமாக உள்ளது.. நாட்டில் இப்போதைக்கு தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளமும் உள்ளது.. ஆனாலும் அங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன' என்றார்.. இந்த வாதத்தை கேட்ட கேரள அரசு தரப்பு வழக்கறிஞரும், "பக்ரீத் பண்டிகையை கொண்டாட சில இடங்களில் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்..

கண்டனம்

கண்டனம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக கேரளா அரசு ஒரே நாளில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.. அந்த மனு செவ்வாய்க்கிழமை அதாவது இன்று காலை, முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்றார். முன்னதாக, கேரள அரசு இந்த முடிவை எடுத்திருப்பது எதிர்பாராத ஒன்றாகும் என்று இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+