கோவிட் வாரியர்ஸ்.. கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க புதிய இணைய பக்கம்.. மோடி அறிவிப்பு!
மத்திய அரசு சார்பாக http://covidwarriors.gov.in என்ற இணையதளம் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய அரசு சார்பாக http://covidwarriors.gov.in என்ற இணையதளம் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,384 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுக்க 826 பேர் இந்த கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பு குறித்து மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.

என்ன சொன்னார் மோடி
பிரதமர் மோடி தனது பேச்சில், தேசத்தில் ஒருவர் கூட பசியால் வாடக்கூடாது என்பதை விவசாயிகள் உறுதி செய்துள்ளனர். இரவு பகல் பாராமல் விவசாயிகள் உழைத்து வருகிறார்கள். நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வது விவசாயிகள் மட்டும்தான். அதேபோல் இன்னும் சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களிடம் வாடகை கூட வாங்குவது இல்லை. பலர் தங்களுக்கு பென்ஷன் வேண்டாம் என்று தியாகம் செய்து உள்ளனர்.

கடும் உழைப்பு
கொரோனா தடுப்பிற்காக மக்கள் இப்படி ஆர்வமாக பணிகளை செய்கிறார்கள். நாட்டு மக்கள் தங்களால் ஆன பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் ராணுவ வீரர்களை போல போராடுகிறார்கள் அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது

வறுமைக்கு எதிராக
நாம் கொரோனாவோடு சேர்த்து வறுமைக்கு எதிராகவும் போராடி வருகிரம் அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார்கள். மக்கள் இந்த கொரோனா தடுப்பு பணிகளில் நிறைய முன்னெடுப்புகளை செய்து உள்ளனர். http://covidwarriors.gov.in இணையதளம் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இணைய பக்கம்
இதில் கொரோனா தொடர்பான அனைத்து விதமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். கொரோனா தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இதில் தீர்வு பெற முடியும். இந்த தளம் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.நாடு முழுக்க உள்ள 130 கோடி மக்களையும் நான் மதிக்கிறேன். அவர்களின் பணிகளை, தியாகத்தை நான் தலை வணங்குகிறேன் , என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications