100 நாள் வேலை திட்டம் இனி.. 200 நாளாக உயர்த்தப்படும்! தேர்தல் அறிக்கையில் CPI வாக்குறுதி
டெல்லி: லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. நேற்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கை பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. அதில் வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, வேளாண் துறை உள்ளிட்டவை குறித்து விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்போது இந்திய கம்யூனிஸிட் கட்சி (சிபிஐ) தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிடப்பட்டுள்ள பல அம்சங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்கப்படும்
PM கேர்ஸ் நிதி விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்
சமூகநலன் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்
நாட்டின் பொருளாதாரத்தின் தன்மையை மிகவும் சமமாகவும், நியாயமாகவும், சமத்துவமாகவும் வைத்திருக்க செல்வ வரி, பரம்பரை வரி மற்றும் பெருநிறுவன வரி போன்ற வரிவிதிப்பு நடவடிக்கைகள் விரிபடுத்தப்படும்
அனைவருக்கும் அணுகக்கூடிய சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை உருவாக்க, சுகாதாரம் மற்றும் கல்விக்கான அதிக நிதியுதவிக்கான கோரிக்கையை CPI எழுப்பும்
தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதோடு சமவாய்ப்பு சமத்துவத்துடன் பொதுத்துறையை மேம்படுத்துவதற்கு CPI போராடும்
இடஒதுக்கீட்டில் 50% என்ற உச்ச வரம்பை நீக்கக் கோரி CPI தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராடும்
எல்லை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஷரத்தை நீக்கி, மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்
சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கு தகுந்த கொள்கை நடவடிக்கைகளை வகுக்க, ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
CAA சட்டத்தை ஒழிக்க CPI பாடுபடும். 100 நாள் வேலை திட்டத்தின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.700ஆக உயர்த்தவும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்துவதற்கான போராட்டத்தை CPI தொடரும்
நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் மற்றும் கிக் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புக்கான தனது போராட்டத்தையும் CPI தீவிரப்படுத்தும்.
இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கும் அக்னிபாத் திட்டம் மற்றும் அரசு பணிகளில் ஒப்பந்த முறைகளை ஒழிக்க கட்சி பாடுபடும்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக மீட்டெடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும்.
கூட்டாட்சியை வலுப்படுத்த, ஆளுநர் அலுவலகத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீவிரப்படுத்தும். மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட போராடும்" என சிபிஐ தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications