பட்ஜெட் அறிவிப்பால் விலையேற போகும் பொருட்கள், விலை குறைய போகும் பொருட்கள்.. என்னென்ன?
எந்தெந்த பொருட்களுக்கான விலை உயர போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
டெல்லி: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இன்றைய மத்திய பட்ஜெட்டில், எந்தெந்த பொருட்களுக்கு விலை ஏற போகிறது, விலை குறையப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Recommended Video
கடந்த ஆண்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக இருந்தது. அதை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் சென்ற ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட்
மத்திய பட்ஜெட் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமான நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது.. ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, எந்தெந்த பொருட்களுக்கான வரியில் தளர்வு இருக்கும், எது விலை குறையும், எந்த பொருட்களின் விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும். அதிலும் குறிப்பாக, மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பாக பட்ஜெட்டில் என்ன அறிவிக்க போகிறார்கள் என்ற ஆர்வமும் ஏற்படும்..

பட்ஜெட்
காரணம், இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் பொருட்களான செல்போன் உள்ளிட்டவை தேவையாக உள்ளது... இது குறித்து அத்துறையை சார்ந்தோர் விடுத்திருந்த கோரிக்கையில், "இந்த வருட பட்ஜெட்டில், வரிகளில் உள்ள ஏற்றத்தாழ்வை குறைக்க மூலப்பொருட்களில் கிடைக்கும் ஜிஎஸ்டி வரியைப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்திருந்தனர்.

ரத்தினங்கள்
அதேபோல, வைரங்கள், ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி கவுன்சில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையையும் வியாபாரிகள் விடுத்து வந்தனர்... அதுமட்டுமல்லாமல், 7.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பட்டை தீட்டப்பட்ட வைரம் மீதான இறக்குமதி வரியை 7.5 லிருந்து 2.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அறிவிப்புகள்
இப்படிப்பட்ட சூழலில்தான் இன்றைய பட்ஜெட்டில், அதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.. இந்த அறிவிப்புகளில் பெரும் பொருட்களின் விலைகள்தான் உயர்ந்துள்ளதே, தவிர, பொருட்களுக்கான விலை குறைப்பு என்பது அவ்வளவாக காணப்படவில்லை.. முக்கியமாக, குடைகளுக்கான இறக்குமதி வரி 20% ஆக உயர்த்தப்படுகிறது என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்... அதேபோல, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வையை 7.5% ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு
சுங்க வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று கூறிய நிதியமைச்சர், சோடியம் சயனைடு வரி அதிகமாகி உள்ளது என்றும், ஸ்டீல் கிராப்புகளுக்கான வரிகள் அதே அளவில் இன்னும் ஒரு வருடத்துக்கு தொடரும் என்று அறிவித்துள்ளார். இதில், வெட்டி எடுத்து பளபளப்பாக மாற்றப்படும் வைரத்தின் மீதான சுங்க வரி 5% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. எனினும், துருப்பிடிக்காத எஃகு, இறால் மீன் வளர்ப்புகளுக்கான சுங்கவரி மற்றும் ரசாயனங்கள் மீதான வரி, வெட்டி எடுக்கப்படும் பளபள வைரத்தின் மீதான வரி குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் ஆறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications