மாமனாரின் அறைக்கு தீ வைத்த மருமகள்.. தீயை பற்ற வைத்து படுக்கையில் வீசிய நிலையில்.. நடந்த ட்விஸ்ட்
டெல்லி: மாமனார் படுத்துக் கொண்டிருந்த அறைக்கு தீ வைத்துள்ளார் மருமகள் ஒருவர்.. இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.என்ன காரணத்திற்காக இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. வடமாநிலத்த்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதன் உண்மை தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது.
ட்விட்டரில் வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில், ஒரு பெண் தனது மாமனாரின் அறைக்கு கையில் காகிதத்துடன் செல்கிறார்.பின்னர் திடிரென காகிதத்தை பற்ற வைத்து அதனை தூங்கிக்கொண்டிருக்கும் மாமானாரின் படுக்கையின் மீது வீசுவதாக வீடியோ உள்ளது. அந்த பெண்ணின் கணவன் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் முதியவரின் படுக்கையில் எரியும் காகிதத்தை அணைக்க அவசரமாக அவர் ஓடுவதும் பின்னர் தீயை அணைப்பதும் தெரிகிறது.

மாமனாருக்கு எதிராக மருமகள் இவ்வளவு ஆவேசமாக ஏன் நடந்து கொண்டார் என்பதற்கு சரியான தகவல்களை சரிபார்க்க முடியாத நிலை உள்ளது. பல ஆங்கில ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், என்ன நடந்தது என்பதை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.
இதனிடைமேய சமூக வலைதளமான "எக்ஸ்' இல் வீடியோவை வெளியிட்ட நபர், அந்த பதிவில், "மாமானார் அறைக்கு அந்த பெண் தீ வைக்க விரக்தியில் இருந்தது தான் காரணம் என்று கூறியுள்ளர் . தன் குழந்தைக்கு உணவளிக்க அந்த பெண் விரும்பி உள்ளார். ஆனால் குழந்தை தூக்கத்தில் இருந்தது. இதனால் குழந்தையை தொடர்ந்து தூங்க அனுமதிக்குமாறு மாமனார் வலியுறுத்தி உள்ளார். தனது குழந்தைக்கு உணவளிப்பதை மாமானர் விரும்பவில்லை என்பதால் விரக்தி அடைந்த பெண், கோபத்தில் மாமனாரின் அறைக்கு தீ வைக்க முயன்றுள்ளார்.
#Wife putting fire on father-in-law.
— ShoneeKapoor (@ShoneeKapoor) November 1, 2023
Good, he decided to record it. pic.twitter.com/jxRKBujZwm
மருமகளின் இந்த திடீரென செயலார் அதிர்ச்சி அடைந்து கண் திறக்கிறார் முதியவர்.இதனிடையே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபர், தனது தந்தையின் படுக்கையில் எரிவதை உடனே ஓடிச்சென்று அணைக்கிறார். அத்துடன் தனது மனைவியையும் கடுமையாக கண்டிக்கிறார். அந்த பெண் இந்தியில் ஏதோ பேசுவதும், அதன்பின்னர் சாப்பிட அனுமதிக்கவில்லை என்றால், இந்த கதி அவருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார். இப்படியாக வீடியோ முடிகிறது.
அண்மையில், உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், 65 வயது முதியவர், தேநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஏற்பட்ட தகராறில், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். டீ தாமதமானதால் அவத் கிஷோர் என்ற அந்த முதியவருக்கும், அவரது மகள் மற்றும் மருமகனுடன் சண்டைபோட்டு இப்படி செய்திருந்தார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications