டேய்.. உக்கார்றா.. பார்த்துகிட்டே இருக்கேன்.. தொந்தரவு செய்த பாஜக எம்பியை.. திட்டிய தயாநிதி மாறன்
டெல்லி: லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பி ஒருவரை திமுக எம்பி தயாநிதி மாறன் கோபமாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் இன்று சந்திரயான் 3 தொடங்கி பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் ராஜ்ய சபாவில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் சட்ட மசோதா மீதான விவாதம் நடந்தது.

நேற்று லோக்சபாவில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் சட்ட மசோதா விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. நேற்று நாடாளுமன்றத்தில் கனிமொழி அனல் பறக்க இந்த மசோதா பற்றி பேசினார்.
அவர் தனது பேச்சில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ரகசியமாகக் கொண்டு வந்துள்ளார்கள்; எந்த அரசியல் கட்சி தலைவரிடமும் ஆலோசிக்கவில்லை. 1996ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா திமுக ஆதரவுடன் கொண்டுவரப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர ஏன் இவ்வளவு கால தாமதம்?
எப்போது மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படும்?. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதில் இவ்வளவு ரகசியம் காட்டியது ஏன்? மகளிரை எம்எல்ஏ ஆக்குவது போல அவர்களை தேர்வு செய்யும் உரிமை மகளிருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை கொண்டு வர பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

பெண்களை மதிக்கிறோம், அவர்களின் சுதந்திரத்திற்காக பாடுபடுகிறோம் என்ற ஆண்களின் பேச்சுகள் பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி மட்டுமே என பெரியார் கூறியதை நினைவுபடுத்துகிறேன். உங்களுக்கு இந்த நாட்டின் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல உரிமை எங்களுக்கும் உண்டு. இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான். பெண்களை மதிப்பதுபோல் ஆண்கள் நடந்து கொள்வது ஏமாற்று வேலை.
ஜெயலலிதா வலிமைவாய்ந்த தலைவர்தான்.. அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாரதி கூறியதுதான் இங்கே நினைவிற்கு வருகிறது. தற்போதைய மகளிர் இடஒதுக்கீடு நிபந்தனைகளை கொண்டுள்ளது, என்றார்.
டேய்.. உக்கார்றா..🔥🔥
— Dr.Aravind Raja (@AravindRajaOff) September 21, 2023
தயாநிதி மாறன்.🔥🔥 pic.twitter.com/O68SZhYvVi
மசோதா இடைஞ்சல்: இந்த மசோதா மீது பேசும் போது கனிமொழிக்கு பாஜக எம்பிக்கள் கடுமையான இடைஞ்சல் கொடுத்தனர். அவர்களை தடுத்த கனிமொழி.. நீங்க என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். எனக்கு புரியாது என்று கடுமையாக பதிலடி கொடுத்தார்.
அதேபோல் இன்று ஆ. ராசா பேசிய போதும் பாஜக எம்பிக்கள் அவரை பேச விடாமல் லோக்சபாவில் தொல்லை செய்தனர். இன்று ஆ. ராசா பேசுகையில், சந்திரயான் திட்டத்தில் திட்ட இயக்குனர்களாக பணியாற்றிய அனைவரும் தமிழர்கள். அதோடு சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தின்போது இருந்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் என அனைவரும் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்கள்.
சந்திரயான் திட்டத்தில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. இதனால் கர்வத்தோடு நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு சமஸ்கிருதமோ, இந்தியோ தெரியாது. சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும்.
பாதுகாப்பு துறை அமைச்சர் சமஸ்கிருதத்தில் விஞ்ஞான கருத்துகள் இருப்பதாக கூறினார். ஆனால் எங்களின் தமிழ் புலவர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறார்கள். திருவள்ளூவர் ‛சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என தெரிவித்துள்ளார்.
அப்போது பாஜக எம்பி ஒருவர் அவரை பேச விடாமல் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டார். இதனால் ராசா பேச்சு தடைபட்டது. இதனால் கோபம் அடைந்த தயாநிதி மாறன் எம்பி.. அந்த பாஜக எம்பியை நோக்கி விரலை காட்டி.. டேய்.. உக்கார்றா.. பார்த்துகிட்டே இருக்கேன்.. தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கே.. என்று கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தார். அவரின் இந்த நடவடிக்கை அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது .
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications