ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.. நீட் விகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
டெல்லி: 18வது லோக்சபா கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், இரு அவையின் கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியிருந்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இந்த தேர்தலில் 400 தொகுதிகளை வென்று அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பாஜகவினர் முழங்கியிருந்த நிலையில், அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெறாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனவே பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது.

நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். வடகிழக்கு, நீட், பெரும்பான்மை ஆட்சி என்று குடியரசு தலைவர் உரையில் குறிப்பிட்டபோதெல்லாம் அதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிகள் முழக்கமிட்டிருந்தனர்.
கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பேசியதாவது, "60 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். மக்களின் இந்த முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை.
பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும். நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டில் தொலைநோக்குடன் கூடிய பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. கொரோனா பெருந்தொற்று, போர் போன்ற சவால்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் உறுதிமொழி இந்தியாவை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தேச நலன் கருதி எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இது சாத்தியமானது.
இன்று உலக வளர்ச்சியில் இந்தியா 15% பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் எனது அரசு செயல்பட்டு வருகிறது. 2024 தேர்தலில் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. விவசாயம், தொழில்நுட்படம், சேவை துறைக்கு இந்த அரசால் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளுக்கு நம் நாடு தீர்வு காணும் என்று உலக அரங்கில் நம்பப்படுகிறது.
நீட் போன்ற தேர்வுகளில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டித்து தண்டிக்கும். தற்போது உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு அரசியல் கட்சிகளின் முரண்பாட்டிற்கு அப்பாற்பட்டு தீர்வு எட்டப்பட வேண்டும். தற்போது முறைகேடுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, கடந்த 10 ஆண்டுகளில் அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 4 மடங்குக்கு மேல் நிதியை உயர்த்தியுள்ளது. அனைத்து வகையான இணைப்புகளும் வடகிழக்கு வரை நீட்டிக்கப்படுகின்றன. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் பேசியிருந்தார்.
இப்படியாக பெரும்பான்மை அரசு என்று கூறியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல நீட் தேர்வு குறித்து பேசும்போது, நீட் நீட் என்று முழக்கமிட்டனர். பாதுகாப்பு துறை குறித்து பேசியபோது அக்னிவீர், அக்னிவீர் என்றும் முழங்கினர். வடகிழக்கு குறித்து பேசும்போது மணிப்பூர், மணிப்பூர் என்று கோஷங்களை எழுப்பினர். இப்படியாக குடியரசுத் தலைவரின் உரை நிறைவடைந்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்த விவாதங்களை மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரும், மாநிலங்களவையில் பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதியும் தொடங்கிவைப்பார்கள். விவாதத்துக்கு மக்களவையில் ஜூலை 2ம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 3ம் தேதியும் பிரதமா் மோடி பதிலளிப்பாா். பின்னா், தீா்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடா் ஜூலை 3ம் தேதியுடன் நிறைவடைகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications