ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு.. அருமை நண்பர் என வேதனையை பகிர்ந்த பிரதமர் மோடி, மன்மோகன் சிங்
டெல்லி: எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் வேதனையளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஜப்பானில் பிரதமாராக இருந்தவர் ஷின்சோ அபே. இவர் தனது பிரதமர் பதவியை 2020ல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். உடல்நலக்குறைவு காரணமாக இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவர் பதவியில் இருந்தபோது இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு மேம்பட்டு இருந்தது. பிற நாடுகளை காட்டிலும் ஷின்சோ அபே இந்தியாவுடன் நல்ல உறவு வைத்திருந்தார்.

ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு
இந்நிலையில் ஜப்பானில் உள்ள நாரா என்ற பகுதியில் மக்கள் மத்தியில் ஷின்சோ அபே பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஷின்சோ அபேயின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஒருவர் கைது- தீவிர விசாரணை
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் தான் ஷின்சோ அபே எதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டார் என்ற காரணம் தெரியவரும். இந்நிலையில் ஷின்சோ அபே மீதான தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனத்தோடு, வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷின்சோ அபே மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி, ‛‛எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். அவருக்காவும், அவரது குடும்பத்தினர் மற்றும் ஜப்பான் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

மன்மோகன் சிங் வருத்தம்
இதுபற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், "எனது நண்பரான ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதலை அதிர்ச்சியடைந்துள்ளேன். அவருக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்'' என கூறியுள்ளார்.

ராகுல்காந்தி கூறியது என்ன?
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியும், ஷின்சோ அபே மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்தியா-ஜப்பான் இடையேயான உறவை ஆழப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தான் பிரதமர் ஷின்சோ அபே. இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். அவர் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications