தேர்தல் வாக்குறுதிகள் vs கள நிலவரம்.. சொன்னதை செய்ததா ஆம் ஆத்மி? வெற்றி சாத்தியமா!
டெல்லி: சட்டமன்ற தேர்தல் பிரசாரங்கள் டெல்லியில் சூடுபிடித்துள்ளன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் காரணிகளாக தேர்தல் வாக்குறுதிகளும், அது எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதிலும் தான் இருக்கிறது. உண்மையில் ஆம் ஆத்மி தனது வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றியிருக்கிறது என்பதை இந்த செய்தி விளக்குகிறது.
கடந்த 2020ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, பல வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. அதில் சில முக்கியமான வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றியும் இருக்கிறது. அதாவது,

இலவச மின்சாரம் மற்றும் குடிநீர்:
இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தற்போது டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் குடிநீரும் கோடிக்கணக்கான மக்களுக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த திட்டங்கள் மூலம் நிதி சுமை அதிகரித்துள்ளதாகவும், மறுபுறம் புதிய திட்டங்களை அமல்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கல்வி சீர்திருத்தம்:
கல்வி சீர்திருத்தம் பற்றி பெரும்பாலும் பாசிட்டிவ் கருத்துக்கள்தான் வருகின்றன. டெல்லி மாடல் பள்ளிகளை தங்கள் மாநிலங்களிலும் கொண்டுவர வேறு சில மாநிலங்கள் முயற்சியும் மேற்கொண்டன. ஆனால் இன்னமும் சில பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. மறுபுறம் ஆசிரியர் பற்றாக்குறை நீடித்து வருகிறது. பள்ளி கல்வித்துறைக்கு போதுமான நிதியை ஒதுக்குவதன் மூலமே இதனை சரி செய்ய முடியும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சுகாதாரம்:
சுகாதாரத்தை பொறுத்த அளவில், மொஹல்லா கிளினிக் திட்டம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான டெல்லி மக்கள் இந்த கிளினிக்குகள் மூலம் இலவச சுகாதாரத்தை பெறுகின்றனர். இருப்பினும் மருந்துகள், மருத்துவர்கள் பற்றாக்குறை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. நம்மூர் அரசு மருத்துவமனையை போன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், தரமான மருத்துவத்தை கொடுக்க இன்னும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு உருவாக்கம்:
மேற்குறிப்பிட்ட மூன்றும் பெரும்பாலான மக்களுக்கு அதிக அளவில் கை கொடுத்திருக்கிறது. ஆனால் 4வதாக உள்ள வேலைவாய்ப்பு உருவாக்கம், ஓரளவு மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் டெல்லி மக்கள் தொகைக்கு ஏற்பட ஆம் ஆத்மி அரசால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அரசு வேலையை தவிர்த்து தனியார் வேலைகளில் சம்பளம் மிகவும் சொற்பமாக இருப்பதால் மக்களால் பொருளாதார சுழற்சியிலிருந்து வெளியே வர முடியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காற்று மாசு:
டெல்லியின் மிகப்பெரிய பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாக இருக்கிறது. காற்று மாசுகளை குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இன்றும் கூட, காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் அந்த அளவுக்கு காற்றின் தரம் மோசமாகியுள்ளது என்று அர்த்தம். இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய பிரச்சனையாக இருக்கிறது.
பொது போக்குவரத்து:
டெல்லியை பொறுத்தவரை பஸ்ஸையோ, ரயிலையோ நம்பினால் போக வேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போய் சேர முடியாது. எனவே பெரும்பாலும் பைக், கார் போன்ற டாக்ஸிகளை மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பொது போக்குவரத்து வசதி போதிய அளவுக்கு அதிகரிக்க முடியவில்லை என்பதே இதன் பொருளாகும். பொது போக்குவரத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு:
டெல்லியை பொறுத்தவரை பெண்கள் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய விவாதம். ஏராளமான திட்டங்கள், கூடுதல் போலீஸ், உதவி எண்கள் என எவ்வளவோ செய்தும் கூட இன்றும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் டெல்லியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு குறையவில்லை. ஆக இதெல்லாம் டெல்லி தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
தேர்தலை பற்றி:
70 தொகுதிகள் அடங்கிய டெல்லி சட்டமன்றத்தை கடந்த 2013 முதல் ஆம் ஆத்மிதான் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் இந்த தேர்தல் ஒப்பீட்டளவில் ஆம் ஆத்மிக்கு கடும் போட்டியாகவே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பாஜக இந்த தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தயாராகிவிட்டார்கள். இதற்கான காரணம், பாஜக மத்திய அரசாக இருந்தாலும் கூட, டெல்லியில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பது அக்கட்சிக்கு நீண்ட கால உறுத்தலாகவே இருக்கிறது.
மறுபுறம் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் ஆம் ஆத்மி கடுமையான நெருக்கடியை சந்தித்திருக்கிறது. குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கையில் வழக்கமாக குற்றவாளிகளின் பெயர்தான் இடம்பெற்றிருக்கும். ஆனால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலில் ஒரு கட்சியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது இதுவே முதல் முறை.
அதேபோல இந்த வழக்கில் சிறைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதாவது, முதல்வராக இருந்தபோது சிறைக்கு சென்ற ஒரே தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்தான். இவ்வளவு நெருக்கடிக்களுக்கு மத்தியில்தான், ஆம் ஆத்மி கட்சி தேர்தலை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications