டெல்லி சட்டசபை தேர்தல் 2025: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தீவிர பிரசாரம்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளையுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடி இன்று டெல்லியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரதமர் மோடி டெல்லியில் வாக்கு சேகரிக்க உள்ளார்.
தலைநகர் டெல்லியில் வரும் 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. 2014 முதல் டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மியை வீழ்த்தி இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவினாலும் பாஜக - ஆம் ஆத்மி இடையேதான் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. பாஜக, ஆம் ஆத்மி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக - ஆம் ஆத்மி இடையே யமுனை நதி விவகாரத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டு அரசியல் களம் கொதிக்கிறது.
டெல்லியில் வரும் 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் தீவிர பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார். டெல்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
முன்னதாக நேற்று முன் தினம் துவாரகா பகுதியில் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- டெல்லியில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அதன் பிறகு இந்த ஆப்டா AAPda(பேரழிவு) ஆட்சி நடைபெற்று வௌர்கிறது. இந்த நாட்டுக்கு சேவையாற்ற பலமுறை எனக்கு வாய்ப்பளித்து உள்ளீர்கள்.
தற்போது, இந்த இரட்டை என்ஜின் அரசுக்கு சேவையாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். டெல்லியின் வளர்ச்சிக்கு நான் உறுதியளிக்கிறேன். டெல்லி வளர்ச்சிக்கு முன் இருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நான் விட்டு விட மாட்டேன்" என்றார். பிரசாரம் நாளையுடன் ஓய்வதால், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளன.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications