நொடிக்கு நொடி.. பாஜக, ஆம் ஆத்மியை சீட் நுனியில் அமர வைத்த டெல்லி மக்கள்.. திக்திக்குன்னு இருக்கே!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் என்னதான் பாஜக முன்னிலையில் இருந்தாலும் அடிக்கடி சீட்டுகள் எண்ணிக்கை மாறுவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கே மொத்தமாக 70 தொகுதிகள் உள்ளன. இதில் மெஜாரிட்டி பெற 36 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தொடக்கத்தில் பாஜக 49 இடங்களில் முன்னிலை வகித்தது. அப்படியே சரிந்து 37 இடங்கள் வரை சென்றது.

அதன்பின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. அப்படியே மேலே வந்து 33 இடங்களில் முன்னிலை வகித்தது. அதன்பின் சட்டென சரிந்து 28 இடங்களில் முன்னிலை பெற்றது.
இதில் என்னதான் பாஜக முன்னிலையில் இருந்தாலும் அடிக்கடி சீட்டுகள் எண்ணிக்கை மாறுவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
டெல்லி தேர்தல்:
டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி - பாஜக - பாஜக இடையே போட்டி நிலவுகிறது. அதேபோல் சிபிஎம், சிபிஐ கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ₹2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
டெல்லி ஆட்சி மாற்றம்:
இதன் மூலம் 2013க்கு பின் முதல்முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் 2013ல் இருந்து ஆம் ஆத்மியை தவிர வேறு கட்சி ஆண்டது இல்லை. இலவச மின்சாரம், ஊழலற்ற நிர்வாகம் என்று பல காரணங்கள் அந்த கட்சி ஆட்சியில் இருந்தது.
ஆனால் கடந்த சில மாதங்களாக முதல்வராக இருந்த கெஜ்ரிவால் கைது, துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது, அதிஷி முதல்வராக பதவி ஏற்பு என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஆட்டம் கண்டது.
அங்கே மொத்தமாக 70 தொகுதிகள் உள்ளன. இதில் மெஜாரிட்டி பெற 36 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அங்கே ஒரு இடம் கூட வெல்ல வாய்ப்பில்லை என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படியே தற்போது காங்கிரஸ் ஒரு இடத்தை பெறுவதற்கு கூட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications