Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தியை தாக்க திட்டம்.. பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பயங்கரவாதிகள் போட்ட ஸ்கெட்ச்.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கார் வெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும், அதனை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி உமர் தான் நடத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் தொடர்புடையதாக கருதப்படும் நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த முயன்றது கைகூடாத நிலையில் பாபர் மசூதி இடிப்பு நாளில் அயோத்தி, வாராணாசி உள்பட பிற இடங்களில் ‛அட்டாக்' நடத்த சதி செய்தது அம்பலமாகி உள்ளது.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயிலில் கடந்த 10ம் தேதி மாலையில் திடீரென்று கார் வெடித்து சிதறியது. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி போட்டுள்ளது. இது பயங்கரவாத தாக்குதல் என்பதும், தாக்குதலை நடத்தியது ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் என்ற பயங்கரவாதி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

delhi bomb blast

டாக்டரான உமர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். தனது கூட்டாளிகள் அடுத்தடுத்து போலீசாரிடம் சிக்கியதால் பயந்துபோன உமர் அவசர கதியில் டெல்லி செங்கோட்டை அருகே அம்மோனியம் நைட்ரேட் பியூயல் ஆயில் மற்றும் டெட்டனேட்டர்களை பயன்படுத்தி காரை வெடிக்க செய்து இறந்தார்.

உமர் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகம் உள்ளது. இந்த உமர் தான் பாபர்மசூதி இடிப்பு தினத்தில் நாடு முழுவதும் பயங்கரமான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்திருக்கிறான். அடுத்த மாதம் (டிசம்பர்)6ம் தேதி தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அப்போது தான் பெரிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தனது கூட்டாளிகள் அடுத்தடுத்து போலீசில் சிக்கியதால் உமர் செங்கோட்டை அருகே தாக்குதல் நடத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் டாக்டர்கள் உள்பட மொத்தம் 8 பேர் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 டாக்டர்கள் அடங்குவார்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் உத்தர பிரதேசத்தின் அயோத்தி, பிரதமர் மோடியின் எம்பி தொகுதியான வாரணாசி உள்ளிட்ட இடங்கள் அவர்களின் டார்க்கெட்டில் இருந்துள்ளது.

தற்போது கைதாகி உள்ள 8 பேரில் 7 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். அதன்படி ஆரிப் நிசார் தார் என்ற ஷகில், யாசிர் உல் அஷ்ரப், மசூத் அகமது தார் என்ற ஷாகித் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள நவ்கம் பகுதியை சேர்ந்தவர்கள். அதேபோல் சோபியன் பகுதியை சேர்ந்த மவுலி இர்பான் அகமது, கண்டேர்பால் பகுதியை சேர்ந்த ஜமீர் அகமது அஹாகர் என்ற முத்லஷா, புல்வாமாவை சேர்ந்த டாக்டர் முஜாமில் ஷகில், குல்காம் பகுதியை சேர்ந்த டாக்டர் அடீல், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஷாகின் ஷாகித் என்ற பெண் டாக்டர் என்று மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஷாகின் ஷாகித் தும் டாக்டர் ஆவார். ஹரியானா மாநிலம் ஃபரிடாபாத்தில் செயல்பட்டு வரும் அல் ஃபலா பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்தார். அங்கு தான் முஜாமில் மற்றும் கார் வெடிப்பை நிகழ்த்திய உமர் பணியாற்றினர். இந்த ஷாகின் ஷாகித் தான் அயோத்தியை குறிவைத்து அட்டாக் செய்ய தயாராகி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு வயது 46. மேலும் ஷாகின் ஷாகித் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மகளிர் பிரிவுக்கான இந்திய தலைவராக இருந்துள்ளார். இவர் ஜமாத் உல் மொமினின் என்ற பெயரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் மகளிர் பிரிவை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனராக இருக்கும் மசூத் அசாரின் சகோதரி சாதியா அசாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது சாதியா அசார் இந்த பயங்கரவாத அமைப்பின் பாகிஸ்தான் மகளிர் பிரிவு தலைவியாக உள்ள நிலையில் ஷாகின் ஷாகித் இந்திய தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் சமீபத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தான். ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நம் நாடு பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மசூத் அசாரின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இறந்தனர். மசூத் அசார் மற்றும் சகோதரி சாதியா அசார் தப்பினர். இதற்கு பழிவாங்க மசூத் அசாத் இந்தியாவில் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு ஆட்களை திரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தான் கடந்த அக்டோபர் மாதம் மத்தியில் ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெயரில் ராணுவம், போலீசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ‛ஆபரேஷன் நவ்கம்' என்ற பெயரில் சோதனை, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் கைது செய்து வந்தனர். இதில் உமர் தலைமறைவான நிலையில் தான் கார்வெடிப்பை நிகழ்த்தி இருந்தார். இருப்பினும் மற்றவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த பெரிய அட்டாக் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பாபர் மசூதி - அயோத்தி விவகாரம் நீண்டகாலமாக சர்ச்சையில் இருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த ராமர் கோவில் கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அயோத்தியை இந்த பயங்கரவாத கும்பல் டார்க்கெட் செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+