Delhi Air pollution: வெளியே கால் வைத்தாலே காலி.. டெல்லியை நிரப்பிய "விஷக்காற்று.." பனி மூட்டம் மாதிரி தெரியும் புகை
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் கடுமையானது என்ற நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குக் காற்றின் தரம் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே காற்று மாசு காரணமாகத் திண்டாட ஆரம்பித்துவிடும். காற்றுத் தரக் குறியீடு மிக மோசமான நிலையை எட்டிவிடும். இந்தாண்டும் கூட அதற்கு விதிவிலக்கு இல்லை. நேற்றைய தினம் அங்குக் காற்று மாசு கடுமையானது என்ற நிலைக்குப் போய்விட்டது. டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு (AQI) ஞாயிற்றுக்கிழமை 461 ஆகப் பதிவானது.

காற்று மாசு
குறைந்த வெப்ப நிலை, காற்று எதுவும் இல்லாதது உள்ளிட்டவை மாசு மோசமான நிலைக்குப் போகக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக அங்கு வஜிர்பூரில் உள்ள காற்றுத் தரக் குறியீடு 500ஐ எட்டியது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிவு செய்யும் மிக மோசமான காற்றின் தரம் இதுவாகும். டெல்லியின் உள்ள 39 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் 38 காற்றின் தரம் கடுமையானது என்ற நிலைக்கே போய் இருந்தது.

இந்த போட்டோ இன்று டெல்லியில் எடுக்கப்பட்ட ஒன்று. பார்க்கப் பனி போல இருந்தாலும் இது காற்று மாசு காரணமாக ஏற்பட்ட பாதிப்பாகும். இதனால் காலை நேரத்திலும் கூட போதியளவில் வெளிச்சம் கூட இருப்பதில்லை. இதனால் அனைத்துத் தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

யமுனை
இந்த போட்டோ இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றாக அறியப்படும் யமுனை ஆற்றில் எடுக்கப்பட்டது. அங்குப் படகில் சிலர் சவாரி செய்யும் நிலையில், 10 அடிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது கூட தெளிவாகத் தெரியாத அளவுக்கு அங்குக் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது. இந்த போட்டோவை பார்த்தாலே நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது தெரியும்.

டெல்லியில் காற்று மாசு உச்சத்தில் இருப்பதால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுவாசிக்கவே சிரமம் இருக்கிறது. நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த டெல்லி அரசு சார்பில் நீர்த்துளிகள் தெளிக்கப்படுகிறது. நீர்த்துளிகள் காற்று மாசை ஏற்படுத்தும் துகள்களைத் தரையில் தள்ளும். இதனால் ஓரளவுக்கு நிலைமையைச் சமாளிக்கலாம்.

போராட்டம்
இந்தாண்டு திடீரென இப்போது காற்று மாசு கடுமையானது என்ற நிலையை அடைந்துவிடவில்லை. கடந்த சில வாரங்கலாகவே நிலைமை மோசமாகவே இருந்து வருகிறது. நாடாளுமன்றத்திலும் கூட இந்த விவகாரம் எதிரொலித்து இருந்தது. டெல்லி காற்று மாசு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தையும் நடத்தியிருந்தனர். மாஸ்க் அணிந்து அவர்கள் நடத்திய போராட்டம் குறித்த போட்டோவும் இப்போது கவனம் பெற்றுள்ளது.
VIDEO | Delhi: A thick layer of smog engulfs the national capital as winter intensifies across North India. Drone visuals from Kashmiri Gate show reduced visibility across the area. GRAP 4 has been implemented in the Delhi–NCR region to curb rising air pollution levels.… pic.twitter.com/aaDFMCAmga
— Press Trust of India (@PTI_News) December 15, 2025
இது வடக்கு டெல்லியில் எடுக்கப்பட்ட டிரோன் வீடியோ. அங்குள்ள காஷ்மீரி கேட் பகுதியில் நிலைமை கையை மீறிச் செல்லும் அளவுக்கே இருப்பதை இது காட்டுகிறது. எங்குத் திரும்பினாலும் அடர்த்தியான புகை மூட்டம் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
காற்றின் தரம்
காற்றின் தரத்தைப் பொறுத்தவரை 0 - 50 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமாக உள்ளது என்று அர்த்தம். 51 - 100 என இருந்தால் ஓரளவுக்குத் திருப்திகரமானது என அர்த்தம். 101 - 200 என்றால் காற்று மாசு ஓரளவுக்கு இருக்கிறது என அர்த்தம். 201 - 300 என இருந்தால் மோசமானது என்றும் 301 - 400 என இருந்தால் மிக மோசமாக இருக்கிறது என்றும் அர்த்தம். 400 முதல் 500 வரை இருந்தால் அது கடுமையாக இருக்கிறது என்று அர்த்தம்!
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?












Click it and Unblock the Notifications