முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் கெஜ்ரிவால்! நாளை எங்கே போகிறார் தெரியுமா? பாஜகவின் அஸ்திவாரமாச்சே
டெல்லி: சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு முன்பாக அனுமன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு கெஜ்ரிவால் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. லோக்சபா தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கதிலும் கெஜ்ரிவாலை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் நோக்கத்திலும் பாஜக தூண்டுதலின் பேரில் இந்த கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வந்தது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது. இதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரசாரம் செய்வது ஒன்றும் அடிப்படை உரிமை இல்லை என்றும், இதற்கு முன்பு பிரசாரம் செய்வதற்காக யாருக்காவவும் ஜாமீன் கொடுக்கப்படவில்லை என்று அமலாகக்த்துறை தனது வாதத்தை முன்வைத்தது.
இந்த நிலையில் இன்று கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 01 ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்த உத்தரவு வெளியான சில மணி நேரத்தில், அதாவது இரவு 7 மணிக்கு டெல்லி திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார்.
கெஜ்ரிவாலை வரவேற்க ஆம் ஆத்மி தொண்டர்கள் சிறை முன்பே திரண்டு இருந்தனர். தொண்டர்களை பார்த்ததும் உற்சாகமாக கை அசைத்த அரவிந்த் கெஜ்ரிவால், தொண்டர்கள் மத்தியில் திறந்த வாகனத்தில் நின்றபடி பேசினார். அப்போது, சர்வாதிகாரத்தை ஒன்றுபட்டு வீழ்த்த வேண்டும் என்றும் எனக்கு அனுமன் ஆசி எப்போதும் உள்ளது. நாளை அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட இருப்பதாகவும் கெஜ்ரிவால் பேசினார்.
சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு முன்பாக அனுமன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு கெஜ்ரிவால் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் இருந்து தனது அடுத்த கட்ட நிகழ்ச்சியை தொடர இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஏனெனில், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் அரசியல் பிரசாரத்தில் மத விவகாரத்தை இந்த முறை சற்று கூடுதலாக பேச தொடங்கியுள்ளார். ராமர் கோவில் விவகாரம் தொடங்கி, மத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இட ஒதுக்கீடு அளிக்க நினைக்கிறது.. இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது என காட்டமாக மோடி பேசி வருகிறார்.
இந்த நிலையில் தான், பாஜக பாணியிலேயே தனது காரசாரமான அரசியல் பிரசாரத்திற்கு ரெடியாவதையே கெஜ்ரிவாலின் நாளைய அனுமன் கோவில் தரிசனம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications