டெல்லியில் விவசாயிகள் பிரம்மாண்ட போராட்டம்.. திடீரென்று ரயில் மறியல் செய்த தமிழக விவசாயிகள்!
டெல்லியில் போராட்டம் செய்ய சென்று இருக்கும் தமிழக விவசாயிகள் இந்தூரில் ரயில் மறியல் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.
Recommended Video

இந்தூர்: டெல்லியில் போராட்டம் செய்ய சென்று இருக்கும் தமிழக விவசாயிகள் இந்தூரில் ரயில் மறியல் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.
பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாநில விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடக்கிறது.
டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் பெரிய அளவில் இந்த போராட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. தமிழக விவசாயிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

என்ன கோரிக்கை
இந்த போராட்டத்திற்கு நிறைய காரணங்கள் உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சேதங்களை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.

தமிழக விவசாயிகள்
இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இன்று மாலை டெல்லியில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளனர்.
|
ரயில் மறியல்
டெல்லி செல்லும் முன் இந்தூர் ரயில் நிலையத்திலும் இறங்கி இவர்கள் போராடி உள்ளனர். இந்தூர் ரயில் நிலையத்தில் இவர்கள், ரயில்களை மறித்து போராடினார்கள். திடீர் என்று விவசாயிகள் ரயில் மறியல் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு
தமிழக விவசாயிகள் கையில் எலும்புகூடுகளுடன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அங்கு வந்த ரயில்வே போலீசார், தமிழக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். இன்று மாலை டெல்லியில் பெரிய போராட்டம் நடக்க உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications