டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"குலுங்குகிறது" டெல்லி.. என்ன செய்ய போகிறார் பிரதமர்.. குளிரில் மிரள வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி

டெல்லி விவசாயிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது

Google Oneindia Tamil News

டெல்லி: உயிரை தந்து போராடி கொண்டிருக்கும் டெல்லி விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தினமும் எழுந்தபடியே உள்ளது.. விவசாயிகளா & மத்திய அரசா? இதற்கு முடிவுதான் என்ன?

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க மோடி அரசு தானாகவே இறங்கி வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. சுருக்கமாக சொல்ல போனால், விவசாயிகள் Vs மத்திய அரசு என்ற நிலை உருவாகி உள்ளது..

காங்கிரஸ் ஆட்சியில் மொத்தமே 7 - 8 சதவிகிதம் விவசாய விளைபொருள்கள்தான் குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் வாங்கப்பட்டன... ஆனால், பாஜக ஆட்சியில் 30 சதவிகிதம் வாங்கப்படுகிறது... அதாவது இது, காங்கிரஸ் அரசைவிட மூன்று மடங்கு அதிகம்... இது இப்போதைக்கு பிரச்சனையாக இல்லை என்றாலும், இந்த வேளாண் சட்டத்தினால் பாதிக்கப்படுவது இடைத்தரகர்களும் பெரு விவசாயிகளும்தான் என்கிறது ஒரு தரப்பு.

டெல்லி சலோ... 7-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்- நாளையும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை டெல்லி சலோ... 7-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்- நாளையும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

சட்டங்கள்

சட்டங்கள்

உண்மையிலேயே மோடி அரசு விவசாயிகளுக்கு நல்லது நினைத்திருந்தால், விவசாயிகள் உள்ளிட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளை கேட்டு அதன்பிறகு இந்த சட்டங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டும்... அதாவது, குறைந்தபட்ச ஆதரவு விலையை தந்துவிடக்கூடாது, வேளாண் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யக் கூடாது, இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் உணவுப்பொருள்களை அரசு வாங்கிவைக்கக் கூடாது என்று உலக வர்த்தக அமைப்பு கடும் அழுத்தம் கொடுத்துவருகிறது... இதற்காகத்தான் அந்த 3 சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது என்கிறது இன்னொரு தரப்பு.

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாது என்பதைத்தான் மறைமுகமாக தன்னுடைய மன் கி பாத் பேச்சின் மூலம் பிரதமர் உணர்த்தியிருந்ததும், அடுத்த நாளே, வாரணாசியில் பேசும்போது, வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசியதுடன், விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டியதும்தான், விவசாயிகளின் போராட்டம் அடுத்தகட்டத்துக்கு செல்ல காரணமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

மோடி

மோடி

ஆக... இந்த பிரச்சனை இப்படியே நீண்டு கொண்டே போகிறதே தவிர, ஒரு முடிவு எட்டப்படவில்லை.. இந்த விவகாரத்தில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் என்று மத்திய அமைச்சர்களை அனுப்பாமல், பிரதமரே நேரடியாக இறங்கி வந்து விவசாயிகளுடன் பேச வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இப்படித்தான் அன்று, அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாகிள் போராட்டங்களை நடத்தி பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.. ஆனால், அவர்களை பிரதமர் கடைசிவரை சந்திக்கவே இல்லை. ஆனால் இப்போது முன்பு போல விவசாயிகள் இல்லை.. காரணம், கடந்த காலங்களில் நடந்த விவசாயிகளின் போராட்டம் போல இது இல்லை.. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

 தீருமா பிரச்சனை?

தீருமா பிரச்சனை?

அதேபோல, பெரும்பான்மை பலத்துடன் இன்றைய மோடி அரசும் உள்ளது... எனவே விவசாயிகளும் சரி, ஆட்சியும் மிகுந்த வலிமையுடன் இருப்பதால், விவசாயிகளுக்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இறங்கி வருவாரா மோடி.. தீருமா விவசாயிகளின் பிரச்சனை.. ஓயுமா அவர்களின் கண்ணீர்!

English summary
Delhi Farmers agitate against BJP Govt farm laws
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X