நள்ளிரவில் வந்த மகன்.. 65 வயது தாயை ரூமில் தள்ளி பலாத்காரம் செய்த கொடூரன்.. அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கு 65 வயதான தாயை பெற்ற மகனே பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொடூரத்திற்கு அந்த நபர் சொன்ன காரணம் தான் போலீஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குடும்பத்திற்குள்ளேயே பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது. அங்கு தனது 65 வயது தாயை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Delhi Man Arrested for assaulting 65-Year-Old Mother Twice as Punishment

போலீசில் புகார்

பாதிக்கப்பட்ட பெண் தனது 25 வயது மகளுடன் ஹவுஸ் காஜி காவல் நிலையத்தை அணுகி இது குறித்து புகார் அளித்தார். சவுதி அரேபியாவில் இருந்து குடும்பத்தினர் மத பயணத்தை முடித்து திரும்பிய கொஞ்ச நேரத்திலேயே இந்த மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. தனது பெண் கடந்த காலத்தில் ஒருவருடன் உறவில் இருந்ததாகக் கூறி, அதற்குத் தண்டனையாகவே இந்தச் செயலைச் செய்ததாக மகன் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது கணவர், மகன் மற்றும் இளைய மகளுடன் டெல்லியின் ஹவுஸ் காஜி பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்குத் திருமணமான இன்னொரு மூத்த மகளும் இருக்கிறார். அவர் அருகில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருகிறார்.

டெல்லிக்கு வர வலியுறுத்தல்

கடந்த ஜூலை 17 அன்று, பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவர் மற்றும் இளைய மகள் சவுதி அரேபியாவுக்குச் சென்றனர். அப்போது திடீரென தந்தையை தொடர்பு கொண்ட மகன், உடனடியாக டெல்லி திரும்புமாறு வலியுறுத்தியுள்ளார். தனது தாயைத் விவாகரத்து செய்யுமாறும், தனது குழந்தை பருவத்தில் அவர் தகாத உறவுகளில் ஈடுபட்டதாகவும் மகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனாலும் சவுதி பயணத்தை முடித்த பிறகே அவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி டெல்லிக்கு திரும்பியுள்ளனர். அப்போது மகன் தனது தாயை ஒரு ரூமில் போட்டு பூட்டி வைத்திருக்கிறார். மேலும், அவரது புர்காவைக் கழற்றுமாறு வற்புறுத்தித் தாக்கியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னைச் சிறுவயதில் கெடுத்துவிட்டதாக தாயிடம் அவர் கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

இதனால் பயந்துபோன அந்த பெண், வீட்டிலிருந்து வெளியேறி தனது மூத்த மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். சில நாட்கள் அங்கேயே அவர் இருந்துள்ளார். பிறகு ஆகஸ்ட் 11ம் தேதி திரும்ப வந்த நிலையில், அப்போது தான் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. அன்று இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த மகன், தாயிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அழைத்துச் சென்றுள்ளான்.

அதிர்ந்த போலீஸ்

அப்போது மீண்டும் அவரை ஒரு அறையில் பூட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். கடந்த காலத்தில் இருந்த தகாத உறவுக்காகவே இந்த தண்டை என கூறி பலாத்காரம் செய்துள்ளான். ஆனால், இந்த கொடூரம் இத்தோடு நிற்கவில்லை. ஆகஸ்ட் 14ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் குற்றவாளி அவரை இரண்டாவது முறையாக பலாத்காரம் செய்துள்ளார்.

மறுநாள், பாதிக்கப்பட்ட பெண் தனது இளைய மகளிடம் நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லியுள்ளார். அதன் பிறகு இளைய மகளும் தாயும் வந்து ஹவுஸ் காஜி காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 64 (பாலியல் பலாத்காரம்) கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸ், குற்றவாளியை கைது செய்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+