டெல்லி மேயர் தேர்தல்.. 3வது முறையும் கூச்சல் குழப்பம்.. தற்காலிக அவை தலைவருக்கு எதிராக அமளி
மாநகராட்சி தேர்தல் நடந்து முடிந்தவுடன் நடதப்படும் முதல் அவை கூட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் இன்றும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய மாமன்ற அவைக்கூட்டத்தில் ஆம் ஆத்மியும், பாஜகவினரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டனர்.
டெல்லி மாநகராட்சியை பொறுத்த அளவில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜகதான் ஆட்சி பொறுப்பில் வருகிறது. இந்நிலையில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 134 வார்டுகளில் வெற்றிவாகை சூடியது. ஆனால் பாஜகவால் 104 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனையடுத்து மேயர் தேர்தலில் ஆம் ஆத்மியின் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் இதற்கான தேர்தல்களை ஒருங்கிணைக்க மாநகராட்சி அவையின் தற்காலிக தலைவராக சத்ய சர்மா என்பவரை துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா நியமித்திருந்தார். இதிலிருந்து குழப்பம் தொடங்கியது. வழக்கமாக அவையின் மூத்த தலைவர்தான் தற்காலிக அவை தலைவராக நியமிக்கப்படுவார். ஆனால் இந்த முறை வேறு ஒருவர் நிமிக்கப்பட்டுள்ளார் என ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து சத்யா சார்மா அவைக்கு புதியதாக 10 நியமன உறுப்பினர்களை நியமித்தார்.

ஒத்திவைப்பு
இதுவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவையின் தற்காலிக தலைவர் தங்களை கலந்தாலோசிக்காமல் இந்த நியமன உறுப்பினர்களை நியமித்துள்ளார் என்றும், இவர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்கள் எனவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. கடந்த கூட்டத்திலும் இதேபோல மேயர் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட இருந்த நிலையில் இந்த பிரச்னையை ஆம் ஆத்மி எழுப்பி அவையில் முழக்கங்களை இட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அவை உறுப்பினர்களும் பதில் முழக்கமிட்டதால் அவை கூச்சல் குழுப்பத்துடன் அன்று ஒத்திவைக்கப்பட்டன.

சலசலப்பு
இதனையடுத்து இன்று மீண்டும் அவை கூடியது. அவையில் மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் நியமன உறுப்பினர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சத்யா சர்மா அறிவித்தார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்கள் என்றும், எனவே இவர்களை வாக்களிக்க அனுமதிக்கப்படுவது என்பது பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்று குற்றம்சாட்டினர். இது குறித்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தலைவர் முகேஷ் கோயல் கூறுகையில், "இந்த நடவடிக்கை மரபுக்கு எதிரானது" என்று கூறினார்.

மறுப்பு
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சத்ய சர்மா, "மக்கள் உங்களை இங்கு தேர்வு செய்து அனுப்பியிருப்பது அவர்களுக்கு சேவை செய்ய மட்டும்தான். தேர்தல் நடக்க வேண்டும்" என்று கூறினார். ஆனால் இதனை ஏற்காக ஆம் ஆத்மி உறுப்பினர்கள் சத்யா சர்மா அறிவிப்புக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு பாஜக உறுப்பினர்களும் ஆம் ஆத்மிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனால் சலசலப்பு எழுந்த நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேயர் தேர்வுக்காக நடைபெறும் மூன்றாவது கூட்டம் இதுவாகும்.

சட்டம்
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 6ம் மற்றும் 24ம் தேதியில் கூட்டம் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டங்களும் சலசலப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (டிஎம்சி) சட்டம் விதிகளின்படி மாநராட்சி தேர்தல் நடந்தவுடன் அதன் முதல் அமர்வில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications