இது லிஸ்ட்லயே இல்லையே.. திமுக தலையில் இடியை இறக்கிய டெல்லி காங்கிரஸ்.. ரெடியாகும் மெகா பேரம்
டெல்லி: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். ஆனால் திமுக கூட்டணியில் பிரச்சனைகள் எழ தொடங்கிவிட்டன. பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக விற்கு எதிரான அதிருப்தி குரல்கள் எழுந்த நிலையில், திமுகவிடம் 42 தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகியவற்றுடன் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பெரிய டீல் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அகில இந்திய தலைமை சட்டமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசனை செய்தனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிறிஸ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி பஞ்சாயத்து
இதன் பிறகு கிறிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம், காங்கிரஸ் சார்பில் கடந்த நவம்பர் மாதமே கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்துவிட்டோம். அதன் பிறகு முதல்வரை சந்தித்து 70 நாட்களாகியும் திமுக பதில் அளிக்கவில்லை. அவர்களுடன் பேசுவதற்கு 2 மாதங்களாக காத்திருக்கிறோம். திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள் என்று குமுறியுள்ளார்.
செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். எல்லோருமே தங்களின் வருத்தத்தை பதிவு செய்தனர். திமுக மீது அதிருப்தி இல்லை. ஆனால் விரைவில் குழு அமைப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் குழு அறிவித்தால் தேவையில்லாத பிரச்சனைகள், குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் உடனடியாக குழு அமைக்க வேண்டும் என்றார்.
டெல்லி கூட்டத்தில் முக்கிய முடிவு
இதுநாள் வரை திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த செல்வப்பெருந்தகை திமுகவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் மேலிட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து எடுத்துரைப்பேன் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இன்றைய நிகழ்வு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இன்றைய கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக திமுக மீதான அதிருப்தியே அதிகம் பதிவாகியுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில் தான் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் திமுக மீது அழுத்தம் கொடுக்கும் விதமாக பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
லிஸ்ட் போட்ட காங்கிரஸ்
அதன்படி வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தங்களுக்கு 42 தொகுதிகளை கேட்பதற்கு காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்தமுறை 17 தொகுதிகளை கூடுதலாக கேட்கிறது. அதனுடன் ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு என்பதையும் அழுத்தமாக பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனுடன் முடியவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதற்கும் இப்போதே காங்கிரஸ் காய் நகர்த்துகிறது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு 20 சதவீதம் இடங்களை ஒதுக்கவும் காங்கிரஸ் திமுகவிடம் கோரிக்கை வைக்கவுள்ளது. காங்கிரஸின் இந்த கோரிக்கைகளை திமுக எப்படி கையாளப்போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications