“ஹை அலர்ட்டில்” டெல்லி.. ஜி20 யில் குவியப்போகும் வெளிநாட்டு தலைகள் - மெட்ரோ நிலைய வாயில்கள் குளோஸ்
டெல்லி: ஜி 20 மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வரவுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் நிலையங்களில் முக்கிய வழிகள் அடைக்கப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகத்துக்கு மெட்ரோ உதவி காவல் கண்காணிப்பாளர் கடிதம் எழுதி இருக்கிறார்.
அவர் எழுதிய கடிதத்தில், "டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டுக்காக பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வருகை தந்து திரும்பி செல்லும் வரை செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை கீழ்காணும் மெட்ரோ ரயில் நிலைய கதவுகளை மூட வேண்டும்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய மெட்ரோவில் உள்ள ஒரு கேட் திறந்து இருக்க வேண்டும். ஏரோ சிட்டி, தௌலா கவுன், தெற்கு வளாகம், துவாரகா செக்டார் 21, மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து கேட்களும் திறந்திருக்க வேண்டும்.
கான் மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 கேட்டுகள் உள்ள நிலையில் 1, 2, 3 ஆம் எண் கேட்களை மூடி இருக்க வேண்டும் என்றும், 4 வது கேட்டை மட்டுமே திறந்து வைக்க வேண்டும். கைலாஷ் காலனி மெட்ரோ ரயில் நிலையத்தின் கதவு எண் 2 ஐ மூட வேண்டும். முதல் கதவை திறக்கலாம்.
மூல்சந்த் மெட்ரோ ரயில் நிலைய வாயிலை மூட வேண்டாம். லஜ்பத் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் 5 கதவுகளில் 5 ஆம் எண் வாயிலை தவிர மற்ற 4 வாயில்களை மூட வேண்டும். ஆஷ்ரம் மெட்ரோ ரயில் நிலையத்தின் 2 ஆம் எண் வாயிலை தவிர, 1 மற்றும் 3 ஆம் எண் வாயில்களை மூட வேண்டும்.
6 வாயில்களை கொண்ட பாரகம்பா மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 ஆம் எண் வாயிலை மட்டுமே திறக்க வேண்டும். உச்சநீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்து வாயில்களையும் அடைக்க வேண்டும். இந்திரபிரஸ்தா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் எண் வாயிலை மட்டும் திறக்கலாம்.
மோடி பாக் மெட்ரோ ரயில் நிலையத்தின் 2 வாயில்களை அடைக்க வேண்டும். பாகாகொ கமா ப்ளே மெட்ரோ ரயில் நிலையம், முனிர்கா மெட்ரோ ரயில் நிலையம், ஆர்.கே.புரம் மெட்ரோ ரயில் நிலையம், ஐஐடி, சதார் பஜார் கண்டோன்மெண்ட் மெட்ரோ ரயில் நிலைய ஆகியவற்றில் அனைத்து வாயில்களையும் அடைக்க வேண்டும்.
ஹவுஸ் காஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் எண்கள், 1, 2, 4 ஆகியவை மூடப்பட்டு, 3 ஆம் எண் வாயிலை மட்டுமே திறக்க வேண்டும். மால்வியா நகர் மெட்ரோ ரயில் நிலைய கதவு எண் 3, 4 மூடப்பட்டு 1, 2 ஐ திறக்கலாம். பாலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் 3 எண் வாயில், மத்திய தலைமை செயலக மெட்ரோ ரயில் நிலையத்தின் 3, 4 வது வாயில்களை அடைக்க வேண்டும்.
உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையத்தின் 1, 3 வது எண் வாயில்களை மூட வேண்டும். லோக் கல்யான் மார்க்கில் 2 வது எண் வாயில், மந்தி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் 2, 3, 4 ஆகிய வாயில்கள், ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தின் 2, 3, 4, 5, 6 ஆகிய எண் வாயில்கள், டெல்லி கேட் மெட்ரோ ரயில் நிலையத்தின் 1, 2, 4, 5 ஆகிய வாயில்கள் மூடப்படும்.
அதே நேரம் சிராக் டெல்லி, பஞ்சசீல பூங்கா, கிரேட்டர் கைலாஷ், நேரு என்கிலேவ், கல்காஜி மந்திர், ஓக்லா என்.எஸ்.ஐ.சி., ராஜீவ் சவுக், சவ்ரி பஜார், சாந்தினி சவுக் ஆகிய மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும். இந்த பாதுகாப்பு பணியின்போது மெட்ரோ நிலைய வாயில்கள் அடைப்பது தொடர்பான கோரிக்கைகள் வந்தால் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications