டெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 38 பேர் இறந்தது தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க டெல்லி காவல்துறை இரண்டு சிறப்பு விசாரணைக் குழுக்களை (எஸ்ஐடி) அமைத்துள்ளது.
இரண்டு சிறப்பு விசாரைணக்குழுக்களும் துணை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் ஆன அதிகாரிகளால் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த சிறப்பு விசாரணை குழுக்களுக்கு டிசிபி ராஜேஷ் தியோ மற்றும் டிசிபி ஜாய் டிர்கி ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என்று செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிறப்பு விசாரணை குழு உடனடியாக மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கூடுதல் காவல்துறை ஆணையர் (குற்றப்பிரிவு) பி.கே.சிங் இந்த பணிகளை மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை இதுவரை 48 எஃப்.ஐ.ஆர்களை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் எஸ்ஐடி விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications