”300 முறை..” சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இரு முறை கடத்திச் சென்ற கொடூரன்! தலைநகர் அதிர்ச்சி
டெல்லி : தலைநகர் டெல்லி அருகே பாலம் எனும் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை டெல்லி போலீசார் கைது செய்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடத்தல், திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தலைநகரான டெல்லியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகக் கொடூரமாக உள்ளதுதான் வேதனை. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி உபியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக உள்ளது.

டெல்லியில் அதிர்ச்சி
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் 16 வயது மாணவியை இரு முறை கடத்திச் சென்று தொடர்ந்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, கொள்ளை , உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தோஷ் சுபாஷ் கம்னே என்ற குற்றம் சாட்டப்பட்டவர் மீது MCOCA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன.

சிறுமி கடத்தல்
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து கம்னே ஒரு மைனர் பெண்ணைக் கடத்திச் சென்றார். காணாமல் போன தனது மகளைக் கண்டுபிடிக்கக் கோரி அவரது தாயார் மே 18 அன்று டெல்லி காவல்துறையை அணுகினார். மைனர் ஏற்கனவே ஒருமுறை கடத்தப்பட்டதால், பாலம் போலீஸ் குழு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது, முந்தைய வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட காம்னேவை முதன்மை சந்தேக நபராக வைத்து விசாரணையைத் தொடங்கியது.

அதிரடி கைது
குற்றம் சாட்டப்பட்டவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால், டெல்லியிலிருந்து வந்த போலீஸ் குழு அந்தப் பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்த நிலையில், முந்தைய கடத்தல் வழக்கைப் போலவே, நாக்பூரில் இருந்து சிறுமி மீட்கப்பட்டார். போலீஸ் குழு நவம்பர் 2021இல் மகாராஷ்டிராவில் சிறுமியைக் கண்டுபிடிக்கபட்ட போதும் அங்கிருந்து காம்னே சிறுமியுடன் தப்பினார். இறுதியாக, ஏப்ரல் 4, 2022 அன்று, பாலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார், குஜராத்தின் சூரத்தில் சிறுமியுடன் மறைந்திருந்த கம்னேவைக் கண்டுபிடித்ததுனர்.

பாலியல் பலாத்காரம்
விசாரணையில், அவர் 2020 ஆம் ஆண்டிலும் சிறுமியை கடத்திச் சென்றதையும் அவர் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டனர். கடந்த முறையைப் போலவே இம் முறையும் பாதிக்கப்பட்ட சிறுமியை நாக்பூருக்கு அழைத்துச் சென்று கானே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக அவர் தனது இருப்பிடம் மற்றும் தொலைபேசி எண்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. மகராஷ்டிர மாநிலம், தும்சாரில் பல கொள்ளை, கடத்தல் மற்றும் கொலை வழக்குகளில் காம்னே பிடி வாரண்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications