ஆஹா.. இதுதான் கூலான மே! 36 ஆண்டுகள் இல்லாத வகையில் டெல்லியில் குறைந்த வெப்பம்.. அடேங்கப்பா.. பின்னணி
டெல்லி: டெல்லியில் கடந்த 36 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மட்டும் வெப்பநிலை குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான காரணமும் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லி எப்போதும் ‛ஹாட்' சிட்டியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டை போல் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் மண்டை பிளக்கும் அளவுக்கு அடிக்கும். இந்நிலையில் தான் இந்த ஆண்டு மே மாதத்தில் டெல்லியில் ஓரளவு மழை பெய்தது.

இதனால் சில நாட்களில் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே தான் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது டெல்லியில் கடந்த 36 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சராசரி வெப்பநிலை குறைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இதற்கு முன்பு 1987 ம் ஆண்டு மே மாதத்தில் சராசரி வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து டெல்லியில் மே மாத வெப்பநிலை என்பது அதிகளவில் இருந்தது. இந்நிலையில் தான் இந்த ஆண்டு டெல்லியில் பெய்த மழையின் காரணமாக சராசரி வெப்பநிலை என்பது 36.8 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இது கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்கூட்டிய காலநிலை கணிப்பின் பிராந்திய மைய தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‛‛ இந்த ஆண்டு மே மாதத்தில் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலையான 36.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. இது கடந்த 36 ஆண்டுகளில் பதிவான குறைந்தபட்ச அளவாகும்.

இருப்பினும் கூட மே மாதத்தில் 9 நாட்கள் டெல்லியில் சராசரி வெப்பநிலை என்பது 40 டிகிரி செல்சியஸை தாண்டியதும், 2 நாட்கள் சில இடங்களில் வெப்பஅலை ஏற்பட்டதையும் இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது. இப்படி நடந்து இருப்பது என்பது கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறமு முதல் முறையாகும்'' என்றார்.
மேலும் டெல்லியில் இந்த மே மாதத்தில் 111 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இருப்பினும் இது 2008ல் பதிவான 165 மிமீ மற்றும் 2021ல் பதிவான 144.8 மிமீ, 2002ல் பதிவான 129.3 மிமீட்டரை விட குறைவாகும். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் சராசரி வெப்பநிலை என்பது குறைந்துள்ளது. இதுதவிர அடுத்த 2 நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அடுத்த 3-4 நாட்களுக்கு பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் வெப்ப அலை நிலைகள் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நேற்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications