7 மாதங்களில் இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 2,726 பேருக்கு கொரோனா தொற்று.. அச்சத்தில் தலைநகர் மக்கள்!
டெல்லி : தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 11) ஒரே நாளில் 2,726 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
டெல்லியில் கடந்த 10 நாட்களில் மட்டும் 19,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கொரோனா தொற்று பரவல் விகிதம் 11.41 ஆக இருந்தது. 2 பேர் பலியாகி இருந்தனர். அடுத்த சில நாட்களில் தொற்று பரவல் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் விகிதமும் 17.83 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஆகஸ்ட் 10ஆம் தேதி கொரோனாவால் 8 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11ஆம் தேதி மட்டும் புதிதாக 2,726 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கான உயர்வாகும். இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை டெல்லியில் 8,840 ஆக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 8,869 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அந்த நிலையை எட்டியுள்ளது. இது டெல்லி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications