ஒரு கம்பெனிதான் மாறினார்.. ஐடி ஊழியர் சம்பளம், 5.5 லட்சத்திலிருந்து 45 லட்சமாக உயர்வு
டெல்லி: பொதுவாக இப்போது எல்லாருமே 5,6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்பெனி மாறுவார்கள். இதுபோல மாறும்போது அதிகபட்சம் 40-50% வரை தான் சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால், இங்கே ஒருவர் ஒரே ஆண்டில் கம்பெனி மாறியிருக்கிறார். இதில் விஷயம் என்னவென்றால் அவருக்கு இதில் சுமார் 700% ஊதிய உயர்வும் கிடைத்திருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த கார்ப்ரேட் உலகில் அனைவரும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நமது அப்பா, தாத்தா காலத்தில் எல்லாம் ஒரு ஆபீசிஸ் சேர்ந்தால் பல ஆண்டுகள், அவ்வளவு ஏன் ஓய்வு பெறும் வரை கூட ஒரே ஆபீசில் வேலை செய்வார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது.

கம்பெனி மாறும் இளைஞர்கள்
ஊதிய உயர்வு, புரோமோஷன் உள்ளிட்ட சலுகைகளுக்காக சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்பெனி மாறுவது என்பது இந்த கார்ப்ரேட உலகில் சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. பொதுவாக இதுபோல கம்பெனி மாறும்போது சராசரியாக ஊழியர்களுக்கு 30-40% வரை ஊதிய உயர்வு கிடைக்கும். சில அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் 100% கூட ஊதிய உயர்வு கிடைக்கும்.
ஆனால், இங்கு ஒருவருக்கு ஒரே ஒரு முறை வேலை மாறியதில் அவரது சம்பளம் 700% அதிகரித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறது. நீங்கள் நம்பாவிட்டாலும் இங்கு ஐடி ஊழியர் ஒருவருக்கு அப்படி தான் நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ஐடி ஊழியர், அவர் எப்படிச் சரியான நேரத்தில் வேலை மாறினார் என்றும் அதன் மூலம் எப்படிப் பல மடங்கு ஊதிய உயர்வு கிடைத்தது என்பதையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டெல்லி ஐடி ஊழியர்
டெல்லியைச் சேர்ந்த அந்த இளம் ஐடி ஊழியர் தனக்கு எப்படி இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது என்பதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது அந்த நபர் முதலில் ஒரு மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆண்டு சம்பளம் ரூ.5.5 லட்சத்தில் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறார். இருப்பினும், ஒரே ஆண்டில் அவருக்கு வேறு ஒரு சர்வதேச ஐடி நிறுவனத்தில் சுமார் ரூ.45 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
700% ஊதிய உயர்வு
தேவேஷ் என்ற அந்த டெவலப்பர், ஒரு வருடம் முன்புதான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். ஒரே ஆண்டில் தலைசிறந்த ஐடி நிறுவனத்தில் இப்போது ரூ.45 லட்சம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இது இவர் முதலில் பெற்ற சம்பளத்தை விட சுமார் 9 மடங்கு அதிகமாகும். தனது சம்பள விவரங்களைப் பகிர்ந்துள்ள அவர், இன்னுமே கூட இது தன்னை போன்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவனுக்குக் கனவாகவே இருப்பதாகவும் பதிவிட்டிருக்கிறார்.
எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்!
அவரது பதிவு இணையத்தில் டிரெண்டான நிலையில், தேவேஷ் மேலும் சில விளக்கங்களையும் அளித்தார். அதாவது ஐடி ஊழியர்கள் முதலில் வேலைக்குச் சேரும் போது, அதிக சம்பளத்தை விட அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.. ஒரு ஐடி ஊழியர் தனது கேரியரின் தொடக்கத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும் வேலையாக இருந்தால் குறைந்த ஊதியத்திற்குக் கூட ஓகே சொல்ல வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications