டெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை!
டெல்லி வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அளித்தனர்
டெல்லி: டெல்லி வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அளித்தனர்
டெல்லியில் சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. டெல்லி கலவரம் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டது. டெல்லி கலவரத்தை கண்டித்தும், மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைதியை கண்டித்தும் இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று ஆலோசனை
நேற்று இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது பேட்டியில், டெல்லி வன்முறை கவலையளிக்கிறது, இது ஒரு அரசியல் சூழ்ச்சி. அரசியல் லாபத்திற்காக வேண்டும் என்றே பாஜக இப்படி செய்கிறது. டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இந்தியாவின் மிக மோசமான உள்துறை அமைச்சர் என்று நிரூபித்துள்ளார்.

நேரடி பொறுப்பு
அவர் இதற்கு நேரடி பொறுப்பு. தற்போது நடக்கும் விஷயங்களை பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், என்றார். இந்த நிலையில் டெல்லி வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்சிங், ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அளித்தனர்.

டெல்லி தீர்மானம்
இந்த தீர்மானத்தில் டெல்லியில் கடந்த நான்கு நாட்களில் என்ன நடந்தது என்பதை மொத்தமாக விளக்கி இருக்கிறார்கள். டெல்லியில் எப்படி வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. எப்படி 34 பேர் பலியானார்கள், கலவரம் எப்படி உண்டானது, 200 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தது எப்படி என்று விரிவாக விளக்கி இருக்கிறார்கள். மத்திய அரசின் மோசமான தோல்வி இது என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பேட்டி அளித்தனர்
இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, 4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடின, மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன, என்று குறிப்பிட்டார். அதேபோல் தலைநகரில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும், டெல்லி அரசும் பொறுப்போடு செயல்பட வேண்டும். மத்திய அரசோடு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications