ஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்!

டெல்லி கலவரத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வெறும் 24 மணி நேரத்தில் டெல்லி ஹைகோர்ட்டில் பல்வேறு திருப்பங்கள் நடந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கலவரத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வெறும் 24 மணி நேரத்தில் டெல்லி ஹைகோர்ட்டில் பல்வேறு திருப்பங்கள் நடந்துள்ளது.

டெல்லியில் ஏற்பட்ட கலவரம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது.இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிரான டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

 Delhi Violence: What happened in the riot case in just 24 hours?

டெல்லி கலவரம் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டதில் இருந்து வரிசையாக ஒரே நாளில் நடத்த பல்வேறு விஷயங்களை இங்கு பார்க்கலாம்:

  • டெல்லி கலவரம் நேற்று முதல் நாள் நடந்த நிலையில் அன்று இரவே அதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. சமூக சேவகர் ஹர்ஷ் மண்டேர் உள்ளிட்ட மூவருக்கும் மேற்பட்டோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இரவோடு இரவாக விசாரிக்கப்பட்டது.
  • இதில் டெல்லி வன்முறைகளில் படுகாயமடைந்து வடகிழக்கு முஸ்தாபாத் அல் ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பாதுகாப்பாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ஹைகோர்ட் நீதிபதி முரளிதர், ஏஜே பாம்பானி அமர்வு பிறப்பித்தது
  • இதையடுத்து மறுநாள் டெல்லி கலவர வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை முதலில் டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் அவர் விடுப்பு எடுத்த காரணத்தால் நீதிபதி முரளிதர் அமர்வுக்கு இந்த வழக்கு சென்றது.
  • இந்த வழக்கு நேற்று நீதிபதி முரளிதரன் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடக்கத்தில் இருந்தே முரளிதர் மிகவும் கடுமையாக பேசினார்.
  • அரசு தரப்பு சார்பாக இதில் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி இருந்தார்.
  • இந்த வழக்கில் விசாரணை இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைக்க வேண்டும் என்று துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி முரளிதரன் மற்றும் தல்வந்த் சிங் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
  • நேற்று இந்த வழக்கில் முதல் உத்தரவு காலை 11 மணிக்கு வந்தது. அதில் மதியம் 12.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது நீதிமன்றத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.
  • மதியம் போலீஸ் கமிஷ்னர் ஆஜரான பின் நடந்த வழக்கு விசாரணையில் சூடு பிடித்தது.
  • பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்றவர்களின் பேச்சுகளால்தான் வன்முறை வெடித்ததாக மனுதாரர் தரப்பு கூறியது.
  • இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு அது தொடார்பாக விசாரணை நடத்தினார்கள்.
  • அதன்படி கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோரின் வீடியோவை போலீஸ் பார்த்ததா, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது.
  • ஆனால் இதற்கு டெல்லி போலீஸ் தரப்பும், உள்துறை அமைச்சகம் தரப்பும் அப்படிபட்ட வீடியோக்களை பார்க்கவில்லை என்று கூறியது. இதை கேட்ட நீதிபதி முரளிதர், நீங்கள் சீரியஸாக பேசுகிறீர்களா? உண்மையில் அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டனர்.
  • ஹைகோர்ட்டில் அந்த வீடியோவை ஒளிபரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின் துஷார் மேத்தா முன்னிலையில் இந்த வீடியோவை நீதிபதி முரளிதர் ஒளிபரப்பினார்.
  • கடைசியாக இந்த வழக்கில் இரண்டாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) கபில் மிஸ்ரா, அனுராக் மீது எப்ஐஆர் பதிய வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
  • மொத்தமாக டெல்லி கலவரம் மீது கவனம் செலுத்தாமல், நேற்று முழுக்க இந்த வழக்கு கபில் மிஸ்ராவை சுற்றியே சென்றது. கபில் மிஸ்ரா இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார்.
  • ஆனால் திடீர் திருப்பமாக நேற்று டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மத்திய அரசுக்கு எதிராக பேசி சில மணி நேரங்களில் முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
  • இரவோடு இரவாக நீதிபதி முரளிதர் உடனடியாக பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட்டில் பதவி ஏற்க வேண்டும் என்று கூறி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
  • இதனால் இன்று டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் முன்னிலையில் டெல்லி கலவரம் விசாரிக்கப்பட்டது.
  • இதில் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது போது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசு தரப்பு சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். அதோடு நிறைய வீடியோக்கள் இருக்கிறது. பலர் இப்படி பேசி உள்ளனர். இவர்கள் மூவர் மேல் மட்டும் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கூறினார்.
  • இதன்பின்தான் இந்த வழக்கில் மூன்றாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி துஷார் மேத்தா வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒரு மாத அவகாசம் கொடுத்து, வழக்கை அடுத்த ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
  • வெறும் 24 மணி நேரத்தில் இந்த டெல்லி கலவர வழக்கு மொத்தமாக தலைகீழாக மாறி உள்ளது. எப்ஐஆரை எதிர்நோக்கி இருந்த கபில் மிஸ்ரா கடைசியில் எப்ஐஆரில் இருந்து தப்பித்துள்ளார். அதே சமயம் ஏப்ரல் 13 க்கு இவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+