ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு தாவி.. நேராக மூளையை தாக்கும் "டெல்டா".. வல்லுநர்கள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா மூளையை தாக்கும் ஆபத்து உள்ளது என்று ஐசிஎம்ஆர் முன்னாள் தலைமை ஆராய்ச்சி மருத்துவர் ராமன் கங்காகேத்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுக்க 85 நாடுகளை டெல்டா வகை கொரோனா தாக்கி உள்ளது. இது பரவுவதில் மிக வேகமானது. மிக மோசமானது. உலகம் முழுக்க இதை பற்றிய கவலை நிலவுகிறது, என்று உலக சுகாதார மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்டா வகை கொரோனா அதிக கேஸ்களை ஏற்படுத்துவதால், அதிக பேர் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. பலி எண்ணிக்கையை இது அதிகரிக்கிறது என்று உலக சுகாதார மையம் புலம்பி உள்ளது.

டெல்டா

டெல்டா

இந்த நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் நினைத்ததை விட மோசமாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் முன்னாள் தலைமை ஆராய்ச்சி மருத்துவர் ராமன் கங்காகேத்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிக பரவும் திறன் கொண்டதாக உள்ளது.

பேட்டி

பேட்டி

இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கும் வேகமாக தாவும் திறன் கொண்டது. டெல்டா வகையில் cell-to-cell transfer வேகமாக நடக்கிறது. இதனால் உடலின் ஒரு உறுப்பை தாக்கிவிட்டு, வேகமாக இன்னொரு உறுப்பையும் தாக்கும் திறன் இதற்கு உள்ளது. மூளைக்கும் செல்லும்.

மூளை

மூளை

செல்கள் வழியாக மூளைக்கும் இது நேராக செல்லும் திறன் கொண்டது. இதனால் மூளை தொடர்பான பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மூளை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. எந்த உறுப்புக்கு இந்த டெல்டா வைரஸ் தாவுகிறது என்பதை பொறுத்தே ஆபத்து அதிகரிக்கும்.

உறுப்பு

உறுப்பு

உடலில் எந்த உறுப்பை வேண்டுமானாலும் இது தாக்கலாம். பல்வேறு உறுப்புகளை இது தாக்கி பாதிப்படைய செய்ய வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தினால் நரம்பு ரீதியான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று, மருத்துவர் ராமன் கங்காகேத்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+