வக்பு சொத்துக்களை ஆக்கிரமித்தேனா.. நிரூபித்தால் ராஜினாமா செய்கிறேன்.. காங்கிரஸ் தலைவர் கார்கே சவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்பு வாரிய சொத்துக்களை கார்கே ஆக்கிரமித்துள்ளதாக அனுராக் தாகூர் பேசிய நிலையில், இதற்கு மல்லிகார்ஜுன கார்கே இன்று பதிலடி கொடுத்தார். வக்பு வாரிய சொத்துக்களை எனது குடும்பத்தினர் அபகரித்ததாக என் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் எனது பதவியில் இருந்து விலக தயார். எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அனுராக் தாகூர் நிரூபிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீது 12 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களுக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே காரசார விவாதம், வார்த்தை யுத்தம் நடைபெற்றது.

did-i-encroach-on-waqf-properties-if-proven-i-will-resign-congress-leader-kharge-challenges

அனுராக் தாகூர் விமர்சனம்

நள்ளிரவு 12 மணிவரை நீடித்த விவாதத்திற்கு பின் லோக்சபாவில் வக்பு வாரிய மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிர்ப்பாக 232 வாக்குகளும் விழுந்தன. லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறியிருக்கும் நிலையில், ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்படும். இங்கும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய பிறகு குடியரசுத்தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மசோதா சட்டமாக்கப்படும். வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று லோக்சபாவில் மல்லிகார்ஜுன கார்கே குறித்து பாஜக எம்பி அனுராக் தாகூர் முன்வைத்த விமர்சனம், பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே பதிலடி

வக்பு வாரிய சொத்துக்களை கார்கே ஆக்கிரமித்துள்ளதாக அனுராக் தாகூர் பேசிய நிலையில், இதற்கு மல்லிகார்ஜுன கார்கே இன்று பதிலடி கொடுத்து இருக்கிறார். மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பாக கூறியதாவது:- வக்பு வாரிய சொத்துக்களை எனது குடும்பத்தினர் அபகரித்ததாக என் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் எனது பதவியில் இருந்து விலக தயார். இத்தகைய குற்றச்சாட்டுகள் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல அமைந்துள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அனுராக் தாகூர் நிரூபிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.

அனுராக் தாகூர் குற்றச்சாட்டுக்கு மல்லிகார்ஜுன கார்கே ஆவேசமாக பதிலளித்த நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவரை சமாதானம் செய்ய முயன்றார். உங்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம் என்று கிரண் ரிஜிஜூ கூறினார். அதேபோல, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறுகையில் 'இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்' என்று கூறினார்.

அனுராக் தாகூர் என்ன பேசினார்

முன்னதாக நேற்று லோக்சபாவில் வக்பு வாரிய மசோதா மீதான விவாதத்தில் பேசிய அனுராக் தாகூர், காங்கிரஸ் கட்சிகளும் இந்த விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துவதாக விமர்சனத்தை முன்வைத்தார். அவர் கூறுகையில், "வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துள்ளது. ஊழலுக்கான மையம் போல அது மாறியுள்ளதால் மாற்றம் அவசியம்.

காங்கிரஸ் மீண்டும் நாட்டில் குழப்பத்திற்கான சூழலை உருவாக்குகிறது. இந்த மசோதா சட்டத்தை திருத்துவது மட்டும் இன்றி, அரசியல் அமைப்பு படியே நாடு இயங்கும் என்ற தெளிவான செய்தியையும் கொண்டுள்ளது. அரசியல் அமைப்புடன் நிற்பீர்களா இல்லை வக்பு விவகாரத்துடன் நிற்பீர்களா என்பதை காங்கிரஸ் முடிவு செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+