‛வந்தே மாதரம் VS ஜன கண மன'.. என்ன வித்தியாசம்? வந்தே மாதரம் பாடலை மத்திய அரசு கட்டாயமாக்கியது ஏன்?
டெல்லி: அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசியகீதம் இசைப்பதற்கு முன்பு ‛வந்தே மாதரம்' பாடலை கட்டாயமாக இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுப்பது போல் வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கும் இடையே என்ன வித்தியாசம்? வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கான வழிக்காட்டு விதிமுறைகள் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

‛வந்தே மாதரம்' மற்றும் ‛தேசிய கீதம்' ஆகிய இரண்டுமே சுதந்திர போராட்ட காலத்தில் நாட்டுப்பற்று உணர்வை தூண்டிய பாடல்களாகும். சுதந்திரத்துக்கு முன்பே பிறந்த இந்த பாடல்கள் இன்றும் நம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன. இருப்பினும் ‛ஜன கண மன' என தொடங்கும் பாடல் தேசியகீதம் ஆனது.
ஆனால் விடுதலைப் போராட்ட வீரர்களை எழுச்சியூட்டிய 'வந்தே மாதரம்' பாடல் தேச பாடலாக மாறியது. அதுமட்டுமின்றி அந்த பாடலின் 4 பத்திகள் நீக்கப்பட்டன. இந்நிலையில் தான் இன்று மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது.
மத்திய உள்துறை அறிவிப்பு
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛அனைத்து அரசு நிகழ்வுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாக தேசிய பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்பட வேண்டும். ‛வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளது.
கருத்து மோதலுக்கு நடுவே...
‛வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் கருத்து மோதல் நடந்தது. தற்போது ‛வந்தே மாதரம்' பாடலை அனைத்து அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சியில் பாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
வழிமுறைகள் என்னென்ன?
* அரசு நிகழ்ச்சிகள், பள்ளி நிகழ்ச்சிகளில் தேசியகீதத்துக்கு முன்பாக ‛தேச பாடலான' வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்.
* தேசியகீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பது போல் வந்தேமாதரம் பாடலுக்கும் அனைவரும் எழுந்து மரியாதை கொடுக்க வேண்டும்.
* வந்தே மாதரம் பாடலை முழுமையாக நீக்கப்பட்ட 4 பத்திகளுடன் சேர்ந்து இசைக்க வேண்டும்.
* வந்தே மாதரம் பாடலை 190 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாடல் எழுதியது யார்?
* இந்த 'வந்தே மாதரம்' பாடலை பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875ஆம் ஆண்டு எழுதினார். அவரது பிரபலமான 'ஆனந்தமடம்' புதினத்தின் ஒரு பகுதியாக, சமஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் இது உருவானது.
* சுதந்திரப் போராட்ட காலத்தில், 'வந்தே மாதரம்' என்பது சுதந்திர போராட்ட வீரர்களின் சக்திவாய்ந்த முழக்கமாக மாறியது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக விளங்கியதுடன், காலப்போக்கில் இந்தியாவின் தேச பாடலாகவும் இது அங்கீகரிக்கப்பட்டது.
தேசியகீதமாகாதது ஏன்?
* ரவீந்திரநாத் தாகூர் 1911ம் ஆண்டில், தனது 'பாரத பாக்கிய விதாதா' என்ற கவிதையிலிருந்து 'ஜன கண மன' பாடலை வங்க மொழியில் எழுதினார், அதற்கு இசையமைத்தும் கொடுத்தார். ஜன கண மன பாடலின் வரிகளையும், இசையையும் தாகூரே 'அல்ஹையா பிலாவல்' ராகத்தில் முழுமையாக உருவாக்கினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950ல் இது தேசிய கீதமாக ஏற்கப்பட்டது.
* 1950 ஜனவரி 24ல் இந்த இரண்டு பாடல்களுமே சுதந்திர இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் ‛ஜன கண மன' பாடலில் மதரீதியான உருவகங்கள் எதுவும் இல்லை. மதச்சார்பற்ற ஒற்றுமையை வலியுறுத்துவதால் வந்தே மாதரத்துக்கு பதில் ஜன கண மன தேசியகீதமானது. அரசு விழாக்கள் மற்றும் முக்கிய தேசிய நிகழ்வுகளில் 52 வினாடிகளில் இசைத்து முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
4 பத்திகள் நீக்கம்
* ரவீந்திர நாத் தாகூர் எழுதி இசையமைத்த ஜன கண மன பாடல் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையிலான வரிகளுடன், எளிய இசையில் இருந்தது. இதனாலேயே ரவீந்திரநாத் தாகூரின் ‛ஜன கண மன' நம் நாட்டின் தேசிய கீதமாகத் தேர்வு செய்யப்பட்டது.
* ‛வந்தே மாதரம்' தேசிய பாடலாக அறிவிக்கப்பட்டு தேசிய கீதத்திற்குச் சமமாகப் பார்க்கப்பட்டாலும், அதன் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொது இடங்களில் பாடும்படி பரிந்துரைக்கப்படுகிறது. அடுத்த 4 பத்திகள் நீக்கப்பட்டன.
* ரவீந்திர நாத் தாகூர் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் சரணத்திற்கு இசையமைத்து 1896 காங்கிரஸ் மாநாட்டில் பாடி அதனை பிரபலமாக்கினார். 1937ல் தேவையில்லாத சர்ச்சைகள் வராமல் தடுக்க, முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவரே பரிந்துரை செய்தார்.
* அதாவது 1937 அக்டோபரில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில், 'வந்தே மாதரம்' பாடலின் பிந்தைய சரணங்கள் குறித்து தாகூர் தனது கவலையை வெளிப்படுத்தினார். துர்க்கை, லட்சுமி போன்ற தெய்வங்களை பற்றிய குறிப்புகள், பல மதங்களை கொண்ட இந்த நாட்டில் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனால், முழுப் பாடலையும் தேசிய கீதமாகப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்றும் அவர் கருதினார்.
இந்து தெய்வங்களின் பெயர்கள்
* வந்தே மாதரம் பாடல் இந்தியாவை ஒரு தெய்வீகத் தாயாக துர்க்கை, லட்சுமி போன்ற தெய்வங்களுடன் ஒப்பிட்டு அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் வரிகளை கொண்டுள்ளது.
* அதேபோல் இந்த இரண்டு பாடல்களின் இசையமைப்பிலும் வித்தியாசங்கள் உள்ளன. வந்தே மாதரம் பல ராகங்களில் பாடப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர் அதன் முதல் பல்லவிக்கு இசையமைத்து 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடி காட்டினார்.
* ரவீந்திர நாத் தாகூர் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாக நிராகரிக்கவில்லை. மாறாக, மத அடையாளங்கள் இல்லாத, தாய்நாட்டைப் போற்றும் அதன் சரணங்களை மட்டுமே ஆதரித்தார். அவரது இந்த அணுகுமுறையால்தான், பாடலின் சுருக்கப்பட்ட வடிவம் 1950-ல் தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது.
* 'ஜன கண மன' தேசியகீத பாடலை பொறுத்தவரை ரவீந்திரநாத் தாகூர்தான் அதன் முழு படைப்பாளியாவார். தேசிய கீதமாக அறிவிக்கப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, 1911ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இந்தப் பாடலை அவரே எழுதிப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications