கண்டெய்னரை மடக்கிபிடித்த ஐபிஎஸ்.. மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே!
டெல்லி: திண்டுக்கல் சரக டிஐஜி-யாக பணியாற்றி வரும் வந்திதா பாண்டே, மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர், அடுத்த அறிவிப்பு வரும் வரை மத்திய அரசு பணியிலேயே தொடர்வார் என்று தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் வந்திதா பாண்டே. 2010ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரி. இவர் 2013ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏஎஸ்பி-யாக பணியில் சேர்ந்தார். அதன்பின் 2014ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஏஎஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் ஏஸ்பி-யாக இருந்த போது, உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் விஐபி-க்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி வழக்கில் உண்மையை பெற்று அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தவர்.

இதனால் வந்திதா பாண்டேவின் பெயர் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகியது. இதனைத் தொடர்ந்து கரூர்-க்கு மாற்றப்பட்ட போது, 2016 சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி அருகே கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை மடக்கி பிடித்து இந்தியாவையே அதிர வைத்தார். அதன்பின் அதிமுக ஆட்சி காலத்தில் வந்திதா பாண்டே சாதாரண பிரிவுகளுக்கு மாற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பின் 2022ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதன்பின் கடந்த ஆண்டு இறுதியில் வந்திதா பாண்டேவுக்கு டிஐஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்ட டிஐஜி-யாக பணியாற்றி வருகிறார். இவரும் திருச்சி மாவட்ட டிஐஜி வருண் குமாரும் திருமணம் செய்த பின், பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் வந்திதா பாண்டே, மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசு பணிக்கு செல்ல வந்திதா பாண்டே விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் மத்திய அரசுப் பணியில் 5 ஆண்டுகள் வரை பணியாற்ற வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரை வந்திதா பாண்டே மத்திய அரசு பணியிலேயே தொடரவும் வாய்ப்புகள் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications