அலறப்போகும் சீனா! இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக.. தினேஷ் திரிபாதி நியமனம்!
டெல்லி: இந்திய கடற்படையின் துணை தளபதியான தினேஷ் கே திரிபாதி, அடுத்த கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது கடற்படை தளபதியாக உள்ள ஹரிஷ் குமாரின் பதவிக்காலம் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இந்த நியமன உத்தரவு வந்திருக்கிறது.
உலகின் மிக வலிமையான கடற்படையை கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 292 போர்க்கப்பல்கள், 17 நீர் மூழ்கி கப்பல்கள், 239 போர் விமானங்களை இந்திய கடற்படை கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி இந்திய கடற்படைக்கு என செலவு செய்யப்படுகிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்க இந்திய கடற்படை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கடற்படையின் துணை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் பயின்று பட்டம் பெற்ற அவர், 2007-08ம் ஆண்டில் அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். அங்கு அவரது திறமையை பாராட்டி ராபர்ட் இ பேட்மேன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இப்படியாக கடந்த 1985ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய கடற்படையில் இணைந்தார்.
தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் போர்முறையில் இவருக்கு இருக்கும் திறன்கள் தனித்துவமானவை. இந்த திறன்கள் இவரை சிக்னல் கம்யூனிகேஷன் அதிகாரி, எலக்ட்ரானிக் வார்ஃபேர் அதிகாரி, நிர்வாக அதிகாரி, ஐஎன்எஸ் மும்பையின் முதன்மை போர் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்த்தியது. அதேபோல இந்திய கடற்படை கப்பல்களான வினாஷ், கிர்ச் மற்றும் திரிசூல் ஆகியவற்றிற்கு தலைமை தாங்கியிருக்கிறார்.
இதற்கு பின்னர் அவருக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மும்பையில் உள்ள மேற்கத்திய கப்பற்படையின் கடற்படை நடவடிக்கை அதிகாரி, கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர், முதன்மை இயக்குநர் நெட்வொர்க் சென்ட்ரிக் ஆபரேஷன்ஸ் மற்றும் முதன்மை இயக்குநர் என பல முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். இவருடைய அனுபவங்கள் கடற்படையின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டும் எனவும் இவருக்கு ரியர் அட்மிரல் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
கடற்படைப் பணியாளர்களின் (கொள்கை மற்றும் திட்டங்கள்) உதவித் தலைவராகவும், கிழக்கு கடற்படைக் கட்டளையிடும் கொடி அதிகாரியாகவும் பணியாற்றிய இவருக்கு கடைசியாக, கடந்த 2019ம் ஆண்டு துணை அட்மிரல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியின் கமாண்டன்டாக பொறுப்பு வகித்த இவர் கொரோனா தொற்று காலத்தில், கடற்படை அகாடமியை சிறப்பாக செயல்பட வைத்திருக்கிறார்.
இவருக்கு சர்வதேச உறவுகள், இராணுவ வரலாறு, அறிவியல் ஆகிய துறைகள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. தற்போது கடற்படை தளபதியாக உள்ள ஹரிஷ் குமாரின் பதவிக்காலம் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய கடற்படை தளபதியாக தினேஷ் கே திரிபாதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சமீப காலமாக இந்திய கடற்படையில் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுடன் சீனா தனது உறவை வலிமைப்படுத்தி வரும் நிலையில், தினேஷ் திரிபாதியின் நியமனம் கவனம் பெற்றிருக்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications