தண்டனை பெற்ற உடனேயே தகுதி நீக்கம்.. அரசியல் அமைப்புக்கு எதிரானது..உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு
டெல்லி: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக சூரத் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.பி பதவி பறிக்கப்படுவதாக லோக்சபா செயலகம் அறிவித்தது.

இது தொடர்பாக லோக்சபா செயலகம் பிறப்பித்த உத்தரவில், சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் விளைவாக வயநாடு எம்.பி ராகுல் காந்தி, தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (e) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், குற்றவழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு எதிராக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தகுதி நீக்கம் செய்வது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது எனவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் அறிவிக்கக் கோரி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு இல்லை.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications