தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் விஞ்ஞானிகள் தேர்வு? நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்வி!
டெல்லி: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பெண் விஞ்ஞானிகள் திட்டம்-C (WOS-C)ன் கீழ் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாடாளுமன்றத்தில் கேள்வியாக எழுப்பி கவனம் ஈர்த்துள்ளார் திமுக எம்.பி. கதிர் ஆனந்த்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
கதிர் ஆனந்த் கேள்வி: 2017 மற்றும் 2022 க்கு இடையே பயிற்சியின் கீழ் திட்டங்களைப் பெற்ற பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மற்றும் சதவீதத்தின் விவரங்கள் மாநில வாரியாக எத்தனை?

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து பூர்வமாக அளித்த பதில்: பெண் விஞ்ஞானிகள் திட்டம்-A (WOS-A) இன் கீழ், 2017 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் விண்ணப்பித்த 3453 பெண்களில் மொத்தம் 1199 பெண் விஞ்ஞானிகள் தேர்வாகி தத்தம் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி பெற்றுள்ளனர்.
- ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 89 பேர் விண்ணப்பித்ததில் 20 பேர் தேர்வாகினர் (22.47%)
- கர்நாடகாவிலிருந்து 271 பேர் விண்ணப்பித்ததில் 85 பேர் தேர்வாகினர்(31.36%)
- கேரளாவிலிருந்து 208 பேர் விண்ணப்பித்ததில் 71 பேர் தேர்வாகினர் (34.13%) தெலங்கானாவிலிருந்து 230 பேர் விண்ணப்பித்ததில் 90 பேர்
தேர்வாகினர் (39.13%) - டில்லியில் இருந்து 311 பேர் விண்ணப்பித்ததில் 125 பேர் தேர்வாகினர் (40.19%)
- மஹாராஷ்டிராவிலிருந்து 330 பேர் விண்ணப்பித்ததில் 143 பேர் தேர்வாகினர் (43.33%)
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பெண் விஞ்ஞானிகள் திட்டம்-C (WOS-C) அறிவுசார் சொத்துரிமைகளில் (IPRs) ஓராண்டு பயிற்சி அளிக்கிறது.
- 2017 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் WOS-C இன் கீழ் பயிற்சி பெற்ற பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையின் மாநில வாரியான விவரங்கள் பின்வருமாறு:
- தமிழ்நாட்டிலிருந்து 1234 பேர் விண்ணப்பித்ததில் 44 பேர் தேர்வாகினர் (3.56%)
- ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 532 பேர் விண்ணப்பித்ததில் 8 பேர் தேர்வாகினர் (1.50%)
- கர்நாடகாவிலிருந்து 703 பேர் விண்ணப்பித்ததில் 21 பேர் தேர்வாகினர் (2.98%)
- கேரளாவிலிருந்து 1141 பேர் விண்ணப்பித்ததில் 32 பேர் தேர்வாகினர் 2.80%) தெலங்கானாவிலிருந்து 632 பேர் விண்ணப்பித்ததில் 8 பேர் தேர்வாகினர் (1.26%)
- டில்லியில் இருந்து 925 பேர் விண்ணப்பித்ததில் 54 பேர் தேர்வாகினர் (5.83%)
- மஹாராஷ்டிராவிலிருந்து 1795 பேர் விண்ணப்பித்ததில் 37 பேர் தேர்வாகினர் (2.06%)
இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications