இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துறவங்க எத்தனை கோடி தெரியுமா?.. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்
டெல்லி: உலக அளவில் தொலைத் தொடர்பு சந்தையில் இந்தியா தொடர்ந்து முன்னணி நாடாக மாறியிருக்கும் நிலையில், இன்டர்நெட் சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் 95 கோடி பேர் இன்டர்நெட் சேவையேப் பயன்படுத்தி வருவதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், மோடி 3.0 வின் 100 நாள்கள் எனும் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 100 நாட்களில் செய்த சாதனைகள் குறித்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையைச் சார்ந்த அமைச்சர்களும் தங்களது துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், சாதனைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தொலைத்தொடர்புத் துறையில் கடந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைப் பணிகள் குறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: செல்போன் தொலைத் தொடர்பு இணைப்புகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாட்டில் 90 கோடியாக இருந்தது. தற்போது 117 கோடி போர் செல்போன் தொலைத் தொடர்பை பயன்படுத்துகின்றனர்.
உலக அளவிலும் தொலைத் தொடர்புச் சந்தையில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதேசமயம் இன்டர்நெட் சேவைகளை இந்தியாவில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, நாட்டில் தற்போது 95 கோடி மக்களை இன்டர்நெட் சேவை சென்றடைந்துள்ளது. பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை தொழில்நுட்பத்துடன் கூடிய பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு.
4ஜி இன்டர்நெட் சேவையை சொந்தமாக வழங்குதல் மற்றும் அதன் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உலக அளவில் ஆறாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்று நிலையில் இந்த ஆட்சிக் காலத்தில் நூறு சதவீதம் தன்னிறைவு அடைவதையே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வரையிலான 100 நாள்களில் நாடு முழுவதும் 7 ஆயிரத்து 258 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில், பொதுமக்கள் தங்களுடைய தாயை கெளரவிக்கும் வகையில் பிரதமர் தொடங்கிவைத்த மரம் நடும் திட்டத்தை முன்னெடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
-
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications