புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. பழைய கட்டிடத்தில் இல்லாத சிறப்பு வசதிகள்..என்னென்ன இருக்காம் தெரியுமா?
டெல்லி: வரும் 28-ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய பாராளுமன்றம் கட்ட வேண்டிய அவசியம் ஏன்.. அதில் உள்ள வசதிகள் என்னென்ன என்பனவற்றை இங்கே காணலாம்.
இந்தியாவில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமான பணிகள் முடிந்து விட்டது.
வரும் 28-ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால், மத்திய அரசு இதை காதில் போட்டுக்கொள்ளாமல் திறப்பு விழாவிற்கு தயராகி வருகிறது. இந்த சர்ச்சைகள் ஒருபக்கம் இருக்கட்டும்..புதிய பாராளுமன்றம் கட்ட வேண்டிய அவசியம் ஏன்..அதில் உள்ள வசதிகள் சிலவற்றை இங்கே காணலாம்.

புதிய பராளுமன்றத்திற்கான அவசியம் ஏன்?:
* சமீப காலமாக பாராளுமன்ற செயல்பாடுகள் மற்றும் இரு அவைகளிலும் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. தற்போது இருக்கும் பாராளுமன்றம் தற்போதைய தேவைக்கு தகுந்தபடி இல்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, இட வசதியாக இருக்கட்டும், பிற வசதிகள் மற்றும் தொழில் நுட்ப ரீதியாகவும் தற்போதைய காலத்திற்கு ஈடு கொடுக்கும் வசதியாக இது இல்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
* தற்போதைய பாராளுமன்ற மக்களவை மற்றும் மத்திய அரங்கு போன்றவை தற்போது நெருக்கமானதாகவும் நிரம்பியும் உள்ளது. இதற்கு மேல் இந்த கட்டிடங்களை விரிவு படுத்த முடியாது. அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், சந்திப்பு அறைகள், உணவு அருந்துவதற்கான இடம், பத்திரிகையாளர்களுக்கான அறை ஆகியவை போதுமான இட வசதியுடன் இல்லை. இதனால், வேறு இடத்தில் இந்த நிகழ்வுகளை எல்லாம் வைக்க வேண்டியுள்ளது.
* சில ஆண்டுகளாவே பாராளுமன்ற கட்டிடத்தில் செய்து வரப்படும் சில மாறுதல்கள் போன்றவற்றால் கட்டிடனத்தின் கட்டமைப்பு கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
* பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் மின்சார கட்டமைப்புகள், ஏசி வசதி, லைட்டிங், ஆடியோ விஷுவல் போன்ற வசதிகள் தற்போதைய தேவைக்கு ஏற்ற விதத்திலும் நவீனமாகவும், இல்லை.
* பாதுகாப்பு ரீதியிலும் தற்போது எம்.பிக்கள் பயன்படுத்தும் பாராளுமன்ற கட்டிடம் உகந்தாதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, நிலநடுக்கம், தீ விபத்து ஆகிய பேரிடர்கள் ஏற்பட்டால் எம்.பிக்கள், ஊழியர்கள் வெளியேறுவதற்கான போதிய வசதி இல்லையாம்

பழைய கட்டிடத்திற்கும் புதிய கட்டிடத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?:
* தற்போது எம்.பிக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தை ஒட்டியே புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 65 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
* முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் போதுமான அளவுக்கு இடவசதியும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும் பல வசதிகள் உள்ளன.
* ரூ.850 கோடிக்கும் மேலாக செலவிட்டு பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும், கூட்டுக்கூட்டத்தில் 1,272 பேரும் அமரவும் இருக்கை வசதியுடன் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது.
* அரசியல் சாசன மண்டபம், உறுப்பினர்களுக்கான ஓய்வறைகள், நூலகம், நிலைக்குழு விசாரணை அறைகள், உணவு விடுதி, வாகன நிறுத்துமிடம் என இந்த நாடாளுமன்ற கட்டிடம் பல்வேறு வசதிகளுடன் அமைகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications