மனைவியின் தற்கொலை வழக்கு.. மருத்துவர் ஆண்டோ புரூனோ குற்றமற்றவர்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: பெண் மருத்துவர் அமலி விக்டோரியா மரண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த அவரின் கணவர் மரியானோ ஆண்டோ புரூனோ இன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவர் குற்றமற்றவர் என்று கூறி உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக வழக்கில் விசாரணை நடந்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் மரியானோ ஆண்டோ புரூனோவை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நிலையில் உச்ச நீதிமன்றம் மரியானோ ஆண்டோ புரூனோவை விடுதலை செய்துள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புரூனோ மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2005ம் ஆண்டு அமலி விக்டோரியா என்பவரை திருமணம் செய்து கொண்டனர்.

அமலி விக்டோரியா
அமலி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2014 நவம்பரில் வீட்டில் அமலி பிணமாக மீட்கப்பட்டார். தூக்கில் தொங்கியபடி அவர் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டார். இதையடுத்து தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கணவர் புரூனோ மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

புரூனோ
இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அமலியை புரூனோ கொடுமை படுத்தியதாக புகார் வைக்கப்பட்டது. வரதட்சணை கேட்டதாகவும், குழந்தை பிறப்பதற்காக வாயில் கோமியம் எல்லாம் ஊற்றி பூஜைகள் செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டது. ஆனால் புரூனோ தரப்பிலோ அப்படி எதுவுமே நடக்கவில்லை. மனைவிக்கு எந்த விதமான கொடுமைகளும் இழைக்கப்படவில்லை. அவர் மன அழுத்தத்தில் இருந்தார்.

வழக்கு
2014ல் அவர் கர்ப்பம் ஆகி , அவரின் கர்ப்பம் கலைந்தது. இதனால் மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் சிலர் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இதை கொலை வழக்கு, மரணத்திற்கு தூண்டிய வழக்கு போல காட்ட முயற்சி செய்கிறார்கள் என்று வாதம் வைத்தார். இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் புரூனோ குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. பெண்ணை கொடுமைப்படுத்தியதாக 7 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.

தீர்ப்பு
2021ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் புரூனோ அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருட தொடக்கத்தில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான். மனநல மருத்துவர் தற்கொலை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனால் பிரச்சனையின் தீவிரத்தை உணருகிறோம் என்று கூறி 7 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

வழக்கு மேல்முறையீடு
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இரண்டு தரப்பிலும் பிரபல வழக்கறிஞர்கள் வழக்கில் ஆஜர் ஆனார்கள். புரூனோ சார்பில் கபில் சிபல் ஆஜர் ஆனார். அதேபோல் அவருக்கு எதிர் தரப்பில் பிரபல வழக்கறிஞர் யோகேஸ்வரன் ஆஜர் ஆனார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஷா, க்ரிஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், அமலி விக்டோரியா மரண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த அவரின் கணவர் மரியானோ ஆண்டோ புரூனோ குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு வழக்கில் இருந்தும் புரூனோ விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications