'ஹூ".. கொரோனா தொற்று பரவல் குறித்து சவுமியா சுவாமிநாதன் சொன்ன முக்கிய தகவல்.. இன்னும் அதிகமாகுமாம்
3வது அலை பரவல் குறித்து சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்
டெல்லி: 3வது அலை வருமா என்ற கலக்கம் மக்களுக்கு சூழ்ந்து வரும் நிலையில், உலக அளவில் கொரோனாவைரஸ் பாதிப்பு மேலும் உயரும் என்று உலக சுகாதார அமைப்பின் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதேசமயம், 2 தடுப்பூசிகள் ஒரு வருடம் அல்லது அதற்கும் அதிகமாக எதிர்ப்பு சக்தி தரும் என்றும் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51.29 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.. 2 வருடம் ஆகியும் கூட, தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50 கோடியை கடந்துள்ளது.. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.05 கோடியை தாண்டியது.. ஆனாலும், 1.93 கோடிக்கும் அதிகமானோர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வார்னிங்
சிகிச்சை பெறுபவர்களில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் லிஸ்ட்டில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன... இதனிடையே 3வது அலை பரவல் வரும் என்று அறிஞர்கள் வார்னிங் தந்து வருகின்றனர். அதற்கான முன்னேற்பாடுகளிலும் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

சவுமியா சுவாமிநாதன்
இந்நிலையில்தான், உலக அளவில் கொரோனா பாதிப்பு உயரும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.. ஒரு டிவி சேனலுக்கு சவுமியா அளித்த பேட்டியில், "தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் பாதிப்பும், மரணங்களும் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.. ஆனாலும் பல ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

2 டோஸ் தடுப்பூசிகள்
இருப்பினும் மரண எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல், கட்டுக்குள் இருந்து வருகிறது. அதில் பெரிதாக உயர்வு இல்லை.. ஆகவே, தடுப்பூசி போடுவதால் மரணத்தின் அதிகரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. அதேபோல அதிக பாதிப்பு கொண்டவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு கிட்டத்தட்ட முழு அளவில் தடுப்பூசி போடப்பட்டு விட்டது... அதேபோல 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு குறைந்தது ஒரு வருடம் பாதுகாப்பு கிடைக்கிறது... சிலருக்கு கூடுதலான காலத்திற்கு இந்த பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது...

பூஸ்டர் டோஸ்
ஒரு வேளை நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு குறைந்தாலும் கூட, தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட தாக்கம் ரத்தத்தில் இருக்கும் என்பதால் பெரிதாக ஆபத்துக்கான வாய்ப்பு இருக்காது... பூஸ்டர் டோஸ் பற்றி இன்னும் முழுமையான ஆய்வுகள் முடியவில்லை... அந்த ரிசல்ட்டுகளுக்காகத்தான் காத்து கொண்டிருக்கிறோம்,.. அதுவரை எதை பற்றியும் உறுதியதாக சொல்ல முடியாது.. அதுவரை எந்த முடிவுக்கும் நாம் வர முடியாது" என்றார் சவுமியா சுவாமிநாதன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications