மந்தநிலை வரப்போகிறது.. பலர் வேலையிழக்கலாம்! 2008 ரிசஷனை சரியாக கணித்த "அழிவின் டாக்டர்".. பரபர தகவல்
டெல்லி: முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி உலகில் பல நாடுகளில் மிக மோசமான மந்தநிலை இந்த வருட இறுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு, பண வீக்கம் அதிகரிக்கலாம் என்று அவர் கணித்து உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த நோரியல் ரொபிணி இதற்கு முன்பே 2008ல் உலகம் முழுக்க பல நாடுகளை புரட்டி போட்ட மந்தநிலை குறித்து துல்லியமாக கணித்து இருந்தார். இந்த நிலையில்தான் இந்த வருடம் இறுதியில் மந்த நிலை தொடங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த மந்தநிலை மிக மோசமான நிலையை அடையும். அடுத்த வருடம் முழுக்க அமெரிக்காவிலும், உலகில் பெரும்பாலான நாடுகளிலும் மந்த நிலையில் நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த S&P 500 பங்கு சந்தை 30 சதவிகிதம் சரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அழிவின் டாக்டர்
S&P 500 பங்கு சந்தை என்பது Standard and Poor's 500 ஆகும். இது அமெரிக்காவை சேர்ந்த 500 பெரிய நிறுவனங்களின் பங்கு சந்தை பட்டியல் ஆகும். இதன் தற்போதைய மதிப்பு 3,757.99. இது அப்படியே 30 சதவிகிதம் அளவிற்கு சரியும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். 2007-2008ல் அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் ரியல் எஸ்டேட் துறை கடுமையான பாதிப்பை அடைந்தது. இதை அவர் முன் கூட்டியே துல்லியமாக கணித்தார். இதற்காக அவருக்கு "அழிவின் டாக்டர்" என்றும் பெயர் வைக்கப்பட்டது.

எச்சரிக்கை
இந்த நிலையில்தான் அவர் தற்போது உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த வருட இறுதியில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளார். உலக நாடுகள் பலவற்றின் கடன் அதிகரித்து உள்ளது. அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களின் கடனும் , அரசு துறை நிறுவனங்களின் கடனும் அதிகரித்து உள்ளது. இது பொருளாதார மந்த நிலையாக மாறும். இந்த வருட இறுதியில் இதனால் வேலைவாய்ப்பு இழப்பு, பண வீக்கம் அதிகரிக்கும்.

பண வீக்கம்
பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது என்பது கண்டிப்பாக இயலாத காரியமாக மாறும். வரும் மாதங்களில் பண வீக்கம் அதிகரிக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் பண வீக்கம் காரணமாக கண்டிப்பாக விலை ஏற்றம் இருக்கும். இந்த விலை ஏற்றம் தவரிக்க முடியாத ஒன்றாக இருக்கும். அதோடு சீனாவில் உள்ள ஜீரோ கோவிட் விதி, ரஷ்யா - உக்ரைன் மோதல் போன்றவை காரணமாக பொருளாதாரம் உலகம் முழுக்க மேலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

என்ன சொன்னார்?
இதை பல நாட்டு அரசாங்கங்கள் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஏனென்றால் பல நாடுகள் கடனில் இருப்பதால் அவர்களால் இந்த மந்த நிலையை தடுக்கவும் முடியாது என்று தெரிவித்து உள்ளார். 1970ல் ஏற்பட்ட மந்த நிலை போலவே இந்த முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது மோசமாகவும்.. நீண்டதாகவும்.. அருவறுப்பானதாகவும் இருக்க போகிறது என்று அவர் எச்க்காரிகை விடுத்து உள்ளார்.

என்ன துறை
கடந்த 2008ல் ரியல் எஸ்டேட் துறை அதிகம் பாதிக்கப்பட்டது. இந்த முறை வங்கிகள், கார்பரேஷன் நிறுவனங்கள், பங்கு சந்தைகள், தனியார் நிறுவனங்கள், பண்ட் நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளார் உலக மார்க்கெட் நிலவரம், ஆசியாவில் குவியும் வெளிநாட்டு நிறுவனங்கள், காலநிலை மாற்றம், அகதிகள் பிரச்சனை என்று பல விஷயங்கள் இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். அடுத்த பெருந்தொற்று இந்த மந்தநிலையாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications