இந்திய பெருங்கடலில் பதற்றம்.. கெமிக்கல் கப்பல் மீது டிரோன் தாக்குதல்! இஸ்ரேலுக்கு தொடர்புடையதா?
டெல்லி: இந்திய பெருங்கடலில் லிபேரியா கொடி ஏற்றப்பட்டு இருந்த கெமிக்கல் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பலில் இன்று ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் காரணமாக கப்பலில் வெடிபொருள் வெடித்துச் சிதறி தீ விபத்தும் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மற்றொரு கடல்சார் நிறுவனம் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் அளித்து இருக்கும் விளக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது லிபேரியா நாட்டு கொடி இருந்த கப்பல் என்றும், அதற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு உள்ளது எனவும் கூறி இருக்கிறது.

இந்திய கடற்கரையை ஒட்டிய பகுதியில் நடந்த இந்த திடீர் தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இந்த தாக்குதல் காரணமாக கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரிட்டன் ராணுவத்தின் யுனைடெட் கிங்டம் மாரிடைம் ட்ரேட் ஆபரேஷன்ஸ் மற்றும் அம்ப்ரே எனப்படும் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கையில், "லிபேரியா கொடி கட்டப்பட்ட ரசாயன டேங்கர் அந்த கப்பலில் இருந்தது. இது இஸ்ரேல் நாட்டுக்கு தொடர்புடைய கப்பல்." என்று விளக்கி உள்ளன.
பிரிட்டனின் யுனைடெட் கிங்டம் மாரிடைம் ட்ரேட் ஆபரேஷன்ஸ் மேலும் கூறுகையில், இந்த தாக்குதல் ஆளில்லா விமானமான டிரோன் மூலம் நடத்தப்பட்டது என்றும் இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை மால்டா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் இருந்து காயமடைந்த மாலுமியை இந்திய கடற்படை மீட்க உதவிய நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு அருகாமையிலேயே இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதே போன்று அரேபிய கடற்பகுதியில் உள்ள எம்வி ரூன் என்ற கப்பலில் 6 கடல் கொள்ளையர்கள் சட்ட விரோதமாக ஏறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய பெருங்கடலில் இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications