ரயில்வேயில் 2,422 காலிப்பணியிடம்.. 10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. விண்ணப்பிக்க ‛சூப்பர்’ வாய்ப்பு
டெல்லி: இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2,422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பம் செய்து பயன்பெற முடியும்.
இந்தியாவில் உள்ள பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக ரயில்வே உள்ளது. இங்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2000க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்புவதற்கான செய்தி வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
மத்திய ரயில்வே சார்பில் மொத்தம் 2,422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரிசினய், பிராகிராமிங் அண்ட் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்ட், மெக்கானிக் டீசல், லேப் அசிஸ்ஜெண்ட், எலக்ட்ரானிக்ஸ் உள்பட ஏராளமான பிரிவுகளில் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் வயது அதிகபட்சமாக 24 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்பதால் குறைந்தபட்ச வயது என்பது 15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வுகள் உண்டு. வயது வரம்பு என்பது 15.12.2022ன் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி என்ன?
விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது Apprentice வகை பணி என்பதால் சம்பளத்துக்கு பதில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி பயிற்சி காலம் முதல் மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பணிக்கு www.rrccr.com எனும் இணையதளம மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவர்கள் மெரிட் லிஸ்ட் மூலம் தேர்வ செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here












Click it and Unblock the Notifications